இந்திய கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்.. ஸ்டார்க்கை தாண்டி சிராஜ் அசத்தல் சாதனை.. பாதி அணியை அனுப்பினார்கள்

இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முக்கியமான ஒரு முன்னேற்றத்தை அடைந்து சாதித்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சரித்துவிட்ட சிராஜ்

முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியான பங்களிப்பை கொடுக்கவில்லை. ஜான் கேம்பல் 8 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சிலும், டேக்ரைன் சந்தர்பால் ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இதைத்தொடர்ந்து சிராஜ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரன்டன் கிங் 18, அலிக் ஆதனஸ் 12 என அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ப்ந்து வீச்சுக்கு வந்த குல்தீப் யாதவ் ஷாய் ஹோப்பை 26 ரன்னில் வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்திருக்கிறது. பாதி அணி பெவிலியன் சென்று விட்டது.

- Advertisement -

முகமது சிராஜ் சாதனை

இன்றைய போட்டியில் ஏழு ஓவர்கள் பந்து வீசிய முகமது சிராஜ் 3 மைடங்கள் செய்து 19 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில், அதிக விக்கெட் கைப்பற்றியவர்களில் முதலிடத்தில் இருந்த மிட்சல் ஸ்டார்க்கை தாண்டி முன்னேறி இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்தியா முதல் டெஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ் எடுத்த மோசமான முடிவு.. கைமேல் கிடைத்த தண்டனை

அதிக விக்கெட் :

முகமது சிராஜ் – 30
மிட்செல் ஸ்டார்க் – 29
நாதன் லியோன் – 24
ஷமர் ஜோசப் – 22

- Advertisement -
Published by