இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக் கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தவறான முடிவை எடுத்து பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. இதற்கான தண்டனை அந்த அணிக்கு உடனுக்குடனாக கிடைத்திருக்கிறது.
இந்திய அணி தேர்வு
இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் புதிய வீரர்களாக முதல் முறையாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இத்துடன் முக்கியமான தேவ்தத் படிக்கல் மற்றும் அக்சர் படேல் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.
மேலும் இந்திய அணியில் சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் விளையாடுகிறார்கள். மேலும் வேகபந்துவீச்சாளர்களாக சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். ரிஷப் பண்ட் காயத்தால் இடம் பெறாததால் துருவ் ஜுரல் விளையாடுகிறார். மற்றபடி சாய் சுதர்சன் முதற்கொண்டு இங்கிலாந்து தொடரில் விளையாடிய அனைவரும் விளையாடுகிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் எடுத்த தவறான முடிவு
குஜராத் அகமதாபாத் மைதானத்தில் கடைசி பத்து போட்டிகளில் ஐந்து போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கிறது. வெற்றியில் முடிந்த ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தவறு செய்திருக்கிறது.
இதையும் படிங்க : 413 ரன்.. ஆஸியை ஓடவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர் பிரியன்ஸ் ஆர்யா.. அதிரடி சதங்கள்.. அசத்தல் வெற்றி
இதற்கு கை மேல் தண்டனையாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதில் மூன்று விக்கெட்டுகளை சிராஜ் மற்றும் ஒரு விக்கெட்டை பும்ரா கைப்பற்றி இருக்கிறார். இந்திய அணி இன்று பேட்டிங் செய்ய வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






