வாசிம் அக்ரமை தாண்டி முகமது சமி அசத்தலான சாதனை.. உலக கோப்பையில் தொடரும் அதிரடி!

0
615
Shami

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகள் லக்னோ மைதானத்தில் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய அணியின் பேட்டிங் கொஞ்சம் தடுமாறியது.

- Advertisement -

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 87, சூரியகுமார் யாதவ் 49, கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் வந்தது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சமி இருவரும் தங்களுடைய உலகத்தரமான பந்துவீச்சில் பெரிய தாக்குதலை தொடுத்தார்கள்.

பும்ரா மலானை வெளியேற்றி, அடுத்து வந்த ஜோ ரூட்டை முதல் பந்தில் எல்பிடபிள்யு செய்து இந்திய அணிக்கு பெரிய திருப்பத்தை கொண்டு வந்தார். இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து அணிக்கு என்ன நடந்ததோ அதுவே இந்த போட்டியிலும் நடந்தது.

- Advertisement -

முகமது சிராஜ் இடத்தில் வந்த முகமது சமி அற்புதமான சீம் பந்துவீச்சில் பென் ஸ்டோக்சை திணறடித்து கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். இதற்கு அடுத்து ஜானி பேர்ஸ்டோவையும் போல்ட் ஆக்கினார்.

அடுத்து பட்லரை குல்தீப் யாதவ் வெளியேற்ற, மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டன் சேர்ந்து ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பை கொண்டு வந்தார்கள். இந்த நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை மாற்றினார். முகமது சமியை கொண்டு வந்தார்.

இரண்டாவது ஸ்பெல்லுக்கு வந்த முகமது சமி முதல் பந்திலேயே மொயின் அலியை விக்கெட் கீப்பர் மூலம் வெளியேற்றினார். இங்கிலாந்து அணி தற்போது ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. முகமது சமி மூன்று விக்கெட் இப்பொழுது கைப்பற்றி இருக்கிறார்.

இதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக முறை மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரமை தாண்டி இருக்கிறார்.

உலகக் கோப்பையில் அதிக முறை மூன்று விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:

கிளன் மெக்ராத் 39 இன்னிங்ஸ் 11 முறை
முரளிதரன் 39 இன்னிங்ஸ் 11 முறை
லசித் மலிங்கா 28 இன்னிங்ஸ் 10 முறை
முகமது சமி 13 இன்னிங்ஸ் 9 முறை
வாசிம் அக்ரம் 36 இன்னிங்ஸ் 9 முறை