ரஞ்சி டிராபி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணிக்காக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து எட்டு விக்கெட்டுகள் கைப்பற்றி முகமது ஷமி இந்தியத் தேர்வுக் குழுவுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
இந்திய அணியின் தேர்வின் போது முகமது ஷமி குறித்து எந்த அப்டேட்டும் தனக்கு கிடைக்கவில்லை என அகர்கர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த முகமது ஷமி யாருக்கும் அப்டேட் தருவது என்னுடைய வேலை கிடையாது விளையாடுவது மட்டுமே என்னுடைய வேலை என்று பதிலடி கொடுத்திருந்தார்.
என்னை வில்லன் ஆக்கிட்டீங்க
இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து என மொத்தம் எட்டு விக்கெட் முகமது ஷமி கைப்பற்றி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியிருக்கிறார். தற்போது அவரது இந்த செயல்பாடு குறித்து போட்டிக்கு பிறகு பேசி இருக்கிறார்.
இது குறித்து முகமது ஷமி பேசும் பொழுது “நான் எப்பொழுதும் சர்ச்சையில்தான் இருக்கிறேன். எல்லோரும் என்னை வில்லன் ஆக்கி விட்டீர்கள். நான் வேறு என்ன பண்ண முடியும்? என்ன செய்ய முடியும்? சமூக ஊடகங்கள் எல்லாவற்றையும் திரித்து வெளியிடுகின்றன. என்னுடைய வேலை சிறப்பாக விளையாடுவது மட்டும்தான். எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் சிறப்பாக விளையாட வேண்டும். பெங்கால் அணிக்கு விளையாடுவது எனக்கு மிகவும் சிறந்த உணர்வு”
நான் திரும்பி வந்து விட்டேன்
“இந்த போட்டிக்கான ஆடுகளத்தை பொருத்தவரை நல்ல புல் இருக்கும் பச்சை ஆடுகளத்தை கேட்டிருந்தோம். தற்போது இந்தியாவில் சிறந்த வேகப் பந்து தாக்குதலை வைத்திருக்கும் அணியாக நாங்கள் இருக்கிறோம். இதற்கு ஏற்ற வகையில் ஒரு ஆடுகளம் கிடைத்தால் அது நியாயமானதுதான்”
இதையும் படிங்க : எழுதி வச்சிக்கோங்க..ஆஸி தொடரில் இந்த 3 கலக்க போறாங்க..சிஎஸ்கே ஜாம்பவான் கருத்து
“கடினமான கட்டத்தில் இருந்து திரும்பி வந்து சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. உலகக் கோப்பைக்குப் பிந்தைய காலம் எனக்கு மிகவும் சிரமமாகவும் நெருக்கடியாகவும் இருந்திருக்கிறது. பின்னர் உள்நாட்டில் எல்லா வகையான கிரிக்கெட்டிலும் விளையாடினேன். இப்போது என்னுடைய பழைய ரிதம் திரும்பி வந்திருக்கிறது. எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் இருப்பதை என்னால் உணர முடிகிறது” என்று கூறியிருக்கிறார்.






