இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் இடம் இல்லையா.? பரவாயில்லை.. அடுத்தது என்னன்னு காட்டுறேன் – முகமது ஷமி அதிரடி!

இந்திய அணியில் இருந்து நீண்ட காலமாக விலகியிருந்தாலும், முகமது ஷமியின் வேகம் மற்றும் போராட்ட குணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை துலீப் கோப்பை இறுதிப்போட்டி மீண்டும் காட்டியுள்ளது. கிழக்கு மண்டல அணிக்காக விளையாடிய ஷமி, தெற்கு மண்டலத்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டி அவரது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் 100-வது போட்டியாகவும் அமைந்தது.

- Advertisement -

இந்திய அணிக்காக ஷமி கடைசியாக 2025 மார்ச் மாதம் விளையாடியிருந்தார். அதன்பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையிலும், தனது உத்வேகம் குறையவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். “எந்த நிலையில் விளையாடினாலும், அடுத்த கட்டத்தை நோக்கித்தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும். உங்களை நீங்களே உந்திக்கொள்ளவில்லை என்றால் உங்கள் அணுகுமுறையில் தவறு இருக்கிறது” என்று ஷமி கூறியுள்ளார்.

“எந்த அணிக்காக விளையாடுகிறீர்கள் என்பது முக்கியமில்லை. அந்த அணியின் சின்னத்தை அணிந்து களமிறங்கும்போது, அதற்கான பொறுப்பை உணர வேண்டும். எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி என்னால் முடிந்ததை செய்ய வேண்டும். அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற பசி எப்போதும் என்னிடம் இருக்கிறது” என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Published by