2024 ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய நட்சத்திரம் விலகல்.. இளம் வீரருக்கு ஏற்பட்ட சோகம்

0
292
Shami

தற்போது இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் மாதம் 11ஆம் தேதி உடன் முடிவுக்கு வருகிறது.

இதற்கு அடுத்த பத்து நாட்களில் மார்ச் 22 ஆம் தேதி 17 வது ஐபிஎல் சீசன் துவங்கப்படும் என்று பரவலான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

மேலும் இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் இந்த முறை தேர்தல் நடைபெறும் என்பதால், ஐபிஎல் தொடருக்கு ஒரு பாதி அட்டவணை மட்டுமே கொடுக்கப்பட்டு, மறு பாதி அட்டவணையை தேர்தல் தேதி அறிவித்தபின்பு முடிவு செய்ய பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

தற்பொழுது 10 அணிகளும் தங்கள் தயாரிப்புகளை துவங்குவதற்காக இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர் முடிவதற்காக காத்திருக்கின்றன. இந்தத் தொடர் முடிந்ததும் எல்லா வீரர்களும் தங்கள் அணிகளின் பயிற்சி முகாமில் சென்ற கலந்து விடுவார்கள்.

ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் உடனே ஜூன் மாத ஆரம்பத்தில் துவங்க இருக்கிறது. எனவே தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய கிரிக்கெட் திருவிழா காத்திருக்கிறது.

- Advertisement -

இப்படியான நிலையில் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இடது கணுக்கால் காயத்தால் வருகின்ற ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அவர் இதற்காக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார். டி20 உலகக் கோப்பை தொடருக்கும் அவர் திரும்ப மாட்டார் என்று தெரிய வருகிறது. அக்டோபர் மாதம் பங்களாதேஷ் அல்லது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமி திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பும்ரா 4வது டெஸ்டில் விளையாடாதது ஏன்? ராஞ்சி ஆடுகளம் எப்படி?.. உண்மையை உடைத்த இந்திய பேட்டிங் கோச்

ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்றுவிட்டார். இந்த நிலையில் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். இளம் கேப்டனான அவருக்கு முகமது சமி போன்ற ஒரு அனுபவ நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது பெரிய நெருக்கடியை உண்டு செய்யும். இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது.