4வது டெஸ்டில் இரண்டு மாற்றம்.. குஜராத் கண்டிஷன் தெரிஞ்ச ஆட்களை இறக்கும் ரோகித் சர்மா – ரிப்போர்ட்!

0
2784

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இரண்டு முக்கிய மாற்றங்களை இந்திய அணி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற உள்ள நான்காவது டெஸ்ட் போட்டி, வருகிற மார்ச் 9ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால், நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். அதேநேரம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் 2-2 என சமன் செய்து தொடரை இழப்பதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணிக்கு நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியை ரோகித் சர்மா மற்றும் அணியினர் கட்டாயம் வென்றாக வேண்டும் என்கிற முனைப்பில் இருப்பதால் எப்படிப்பட்ட பிளேயிங் லெவனை தேர்வு செய்யலாம் என தொடர்ந்து ஆலோசித்து வருவதாக அணியின் தரப்பில் இருந்து தகவல்கள் வருகிறது.

- Advertisement -

முன்னதாக, துவக்க வீரர்களில் கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் இருவரில் யாரை ஓப்பனிங் இறங்க வைக்கலாம்? என்கிற விவாதங்கள் நிகழ்ந்து இருக்கிறது. கேஎல் ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இவை ஒருபுறம் இருந்தாலும், பிளேயிங் லெவனில் மேலும் இரண்டு மாற்றங்களை ரோகித் சர்மா செய்ய உள்ளார் என தெரிய வந்திருக்கிறது. அவற்றுள் ஒன்றாக, இசான் கிஷன் 4வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்று டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக உள்ளார். இவருக்கு பதிலாக யார் வெளியேறுவார் என்று தற்போது வரை தகவல்கள் வரவில்லை. கேஎஸ் பரத் வெளியில் அமர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அடுத்ததாக, ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடி வரும் முகமது சமி, ஐபிஎல் வாயிலாக குஜராத் மைதானத்தின் கண்டிஷன் பற்றி நன்கு உணர்ந்தவர். ஆகையால் அவரை பிளேயிங் லெவனில் எடுத்துவர ரோகித் சர்மா முடிவு செய்திருக்கிறார்.

சமி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு நல்ல பார்மில் இருப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. முகமது சிராஜ் வெளியில் அமர்த்தப்பட்டு, சமி உள்ளே எடுத்து வரப்படவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியானதாக தகவல்கள் வந்திருக்கிறது.