இப்ப ஷமிக்கு நடந்துகிட்டு இருக்கிறது நியாயம் இல்ல.. நான் நேரடியா ஒரு விஷயத்தை பார்த்தேன் – கங்குலி ஆதரவு

0
7
Shami

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை மீண்டும் இந்திய அணிக்கு விளையாட வைக்க வேண்டும் என சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தியத் தேர்வுக்குழு தொடர்ச்சியாக முகமது ஷமியை இந்திய அணிக்கு எந்த வடிவத்திலும் தேர்வு செய்யாமல் புறக்கணித்து வருகிறது. இது இந்திய கிரிக்கெட்டில் தற்போது சர்ச்சையான விஷயமாக பேசப்பட்டும் வருகிறது.

- Advertisement -

நிரூபித்த முகமது ஷமி

இந்த வருடம் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வைக்கப்பட்ட முகமது ஷமியை அதற்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் தேர்ந்தெடுக்காவிட்டாலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலும் தேர்ந்தெடுக்கவில்லை. தொடர்ந்து அவரை புறக்கணித்து வருகிறார்கள். இதற்கான காரணம் குறித்து தெளிவாக சொல்லப்படவில்லை.

அதே சமயத்தில் முகமது ஷமி இந்த ஆண்டு ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடி அதிகபட்ச விக்கெட்டுகள் கைப்பற்றி அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். அவர் தன்னை நிரூபித்து விட்ட பிறகும் கூட, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

அவர் சரியாக இருக்கிறார்

இது குறித்து சவுரவ் கங்குலி பேசும் பொழுது “முகமது ஷமி தற்பொழுது விதிவிலக்காக மிகச் சிறப்பாக பந்தரித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் நல்ல உடல் தகுதி உடனும் இருக்கிறார். இத்துடன் தனியாக நின்று கடைசி மூன்று போட்டிகளில் அவர் பெங்கால் அணியை வெல்ல வைத்ததையும் பார்த்தோம்”

இதையும் படிங்க : கில்லை தூக்க கம்பீர் தயங்க மாட்டார்.. அடுத்து டீம்ல இந்த பெரிய மாற்றம் இருக்க போகுது – ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு

“இந்தியத் தேர்வுக்குழு அவரை கவனித்துக் கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியும். அவருடன் அவர்கள் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் உடல் தகுதி ரீதியாக அவர் மிகவும் முன்னேறி விட்டார். தற்போது அவரை தேர்வு செய்யாதது போல நடந்து கொள்ளக் கூடாது. அவரை மூன்று வடிவத்திலும் இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும். அவர் கொண்டு வரும் திறமை என்பது மிகப்பெரியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -