லோக்கல் டெஸ்ட் ஆடற என்னால ஆசிய கப்ல டி20 ஆட முடியாதா.. அவங்க என்னமோ பண்ணட்டும் – ஷமி கருத்து

0
104
Shami

தற்போது ஆசியக் கோப்பை டி20 இந்தியா அணிக்கு தன்னை தேர்வாளர்கள் தேர்வு செய்யாதது குறித்து முகமது ஷமி மிகவும் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு காயம் காரணமாக நீண்ட நாட்கள் கழித்து சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இடம் பெற்றார். இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அவர் ரஞ்சி டெஸ்ட் தொடர் விளையாடிய பொழுதும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

துலிப் டிராபி வாய்ப்பு

அடுத்து இந்த மாதம் 29ஆம் தேதி உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலிப் டிராபி துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கு முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி சான்று பெற்று, பிராங்கோ டெஸ்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

தற்போது அவர் முழு உடல் தகுதியுடன் இருந்த போதும் கூட ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால் மிகவும் கடின வடிவமான அதிக உழைப்பை தரவேண்டிய டெஸ்ட் வடிவத்திற்கு அவரை தேர்வு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

டி20 ஆட முடியாதா?

இதுகுறித்து முகமது ஷமி பேசும்பொழுது “என்னை தேர்வு செய்யாததற்கு நான் யாரையும் குறை சொல்லவும் புகார் செய்யவும் இல்லை. இந்திய அணிக்கு நான் சரியானவன் என்றால் என்னை தேர்ந்தெடுங்கள். இல்லையென்றால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் கிடையாது. இந்திய அணிக்கு சிறந்ததை செய்ய வேண்டிய பொறுப்பு தேர்வாளர்களுக்கு இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் என்னால் முடிந்ததை செய்வேன். எனது திறமைகளில் நம்பிக்கை இருக்கிறது. நான் கடினமாக உழைக்கிறேன்”

இதையும் படிங்க : பறந்த 4 பவுண்டரிகள்.. அடித்து விளாசிய சேவாக் மகன்.. அறிமுக போட்டியில் அட்டகாசம் – டிபிஎல் 2025

“நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவது பற்றி எனக்கு எந்த நம்பிக்கையும் இப்பொழுது கிடையாது. விளையாட வைத்தால் 100 சதவீதத்தை கொடுத்து சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். நான் தற்போது துலிப் டிராபி விளையாடினால், எல்லா வடிவ கிரிக்கெட் விளையாடவும் தயாராக இருக்கிறேன் என்று அர்த்தம். நான் பெங்களூருக்கு அழைக்கப்பட்டு உடல் தகுதி தேர்வில் மற்றும் புதிய பிராங்கோ தேர்வில் தேர்ச்சி அடைந்து வந்திருக்கிறேன். இப்போது நான் விளையாட தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -