பறந்த 4 பவுண்டரிகள்.. அடித்து விளாசிய சேவாக் மகன்.. அறிமுக போட்டியில் அட்டகாசம் – டிபிஎல் 2025

0
672
Aryavir

தற்போது நடைபெற்று வரும் டெல்லி பிரிமியர் லீக் தொடரில் தனது அறிமுக போட்டியில் வீரேந்த சேவாக் மகன் ஆரியவீர் சேவாக் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் டெல்லி மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு முதல் டெல்லி பிரிமியர் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இந்த முறை மத்திய டெல்லி அணியில் 8 லட்சம் ரூபாய்க்கு வீரேந்தர் சேவாக் மகன் ஆரிய வேர் சேவாக் வாங்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

முதல் வாய்ப்பில் முத்திரை

இதற்கு முன்பாக மத்திய டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடியிருந்த பொழுதும் ஆரியவீர் சேவாக் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டும் அவரை விளையாட வைக்காதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர் விளையாடுவதை எதிர்பார்த்து நிறைய ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று கிழக்கு டெல்லி அணிக்கு எதிராக அவருக்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த அவருடைய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வந்த அவர் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் உடன் 22 ரன்கள் எடுத்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 137 என்று இருந்தது. மேலும் தந்தையைப் போலவே அச்சமின்றி அதிரடியாக விளையாடினார். இந்திய அணிக்காக விளையாடி இருக்கும் நவ்தீப் ஷைனி பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அட்டகாசமாக அடித்தார்.

- Advertisement -

உறுதியான எதிர்காலம்

இதைத்தொடர்ந்து அவர் விளையாடிய மத்திய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக விளையாடிய கிழக்கு டெல்லி அணி வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. எனவே மத்திய டெல்லி அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : யாருமே பேசலனா.. பாவம் விராட் ரோஹித் என்ன பண்ணுவாங்க.. இது கிரிக்கெட்டுக்கு நல்லவல்ல.. முன்னாள் இந்திய வீரர் ஆதங்கம்

நேற்று ஆரியவீர் சேவாக் ஷாட் செலக்சன் மற்றும் அவருடைய அச்சம் இல்லாத அணுகுமுறை இரண்டையும் பார்த்த கிரிக்கெட் வல்லுனர்கள் அவருக்கு உறுதியான எதிர்காலம் இருப்பதாக கூறுகிறார்கள். இதன் மூலம் தந்தைக்கு அடுத்து மகனும் இந்திய கிரிக்கெட்டில் கால் வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பேசப்படுகிறது.

- Advertisement -