இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பதிந்த பதிவில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் காயத்துடன் விளையாடிய காரணத்தினால், அதற்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து தற்போது வரை உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு கூட மீண்டு வர முடியாமல் அவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொய்த்துப் போன நம்பிக்கை
அடுத்த மாதம் இந்தியா ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முகமது ஷமி எப்படியும் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று கடைசி இரண்டு அல்லது மூன்று போட்டியில் ஆவது விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் அவரும் ரஞ்சி டிராபியில் தன்னுடைய மாநில அணியான பெங்கால் அணிக்கு விளையாடுவதற்கு தயாராவதாக நம்பிக்கை அளித்தார். இப்படியான நிலையில் நேற்று ஆஸ்திரேலிய தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவருடைய பெயர் 5 போட்டிகளுக்கும் இடம்பெறவில்லை. அவர் முற்றிலும் உடல் தகுதி இல்லாமல் இருக்கிறார் என்று தெரிய வருகிறது.
பிசிசிஐ மற்றும் இந்திய ரசிகர்கள் மன்னித்து விடுங்கள்
இந்த நிலையில் முகமது ஷமி உடல் தகுதி பெற்று ஆஸ்திரேலியா தொடருக்கு விளையாட முடியாமல் போனதற்காக, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தை ரிஷப் பண்ட் நிரப்புவார்.. அங்க இதான் நடக்கும் – சைமன் டால் பேச்சு
இது குறித்து முகமது ஷமி தெரிவிக்கும் பொழுது “நான் என்னால் முடிந்த வரை முயற்சிகளை மேற்கொண்டு என்னுடைய பந்துவீச்சை மேம்படுத்தி வருகிறேன். போட்டியில் விளையாடும் அளவுக்கு தயாராகி உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கு பெற தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன். நான் தற்போது விளையாட வர முடியாமல் இருப்பதற்கு பிசிசிஐ மற்றும் இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மிக விரைவில் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு வந்து விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.






