ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜா இதை நிச்சயம் செய்ய மாட்டார்.. சிஎஸ்கேவுக்கே செய்ய அவருக்கு பிடிக்கல – முகமது கைஃப் பேட்டி

0
40

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்படுகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்படுகிறார் எனவும் சென்னை அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷாம் கரன் இருவரும் ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்படுகிறார்கள் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இது கிட்டத்தட்ட உண்மைதான் என சில அதிகாரப்பூர்வ கிரிக்கெட் வலைதளங்களில் இருந்தும் தகவல்கள் வெளிவந்தது.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்படும் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று நேற்று சில கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது சூழ்நிலையில் பெங்களூர் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருமான முகமது கைஃப் இதுகுறித்து தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது ஜடேஜாவை கேப்டன் ஆக்கும் திட்டம் ராஜஸ்தான் அணிக்கு நிச்சயமாக கிடையாது எனவும் முதலில் தான் கேப்டனாக ஜடேஜாவே விரும்ப மாட்டார் எனவும் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இதே ரவீந்திர ஜடேஜா இப்போது கிடையாது. ஆனால் இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் அதே வீரர் கிடையாது. இது ஒரு புதிய அமைப்பு, அனைத்து வீரர்களும் இப்போது மாறிவிட்டனர். எனவே பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜடேஜா ராஜஸ்தான் அணிக்காக விளையாடினால் அவர் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை.

இதையும் படிங்க:தெஆ அணி இந்த ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டுமே பயப்படும்.. முதல் டெஸ்ட்ல இதுதான் வித்தியாசம் – அபிஷேக் நாயர் கருத்து

ரியான் பராக்கை ஆதரிக்க வேண்டும் என்கிற திட்டமே அவர்களிடம் இப்போது இருக்கிறது. கடந்த ஆண்டு அவர் செய்த தவறுகளில் இருந்து தன்னை திருத்திக் கொண்டு இந்த ஆண்டு அவர் தொடர்ந்து முன்னேறுவார் என்று நம்பப்படலாம். மேலும் ஜடேஜாவுக்கு கேப்டனாக இருப்பது அவருக்கு நிச்சயம் விருப்பம் கிடையாது. அவர் சிஎஸ்கே அணியிலும் கேப்டனாக இருந்தார், ஆனால் அது அவருக்கு பிடிக்கவில்லை. கேப்டன் பதவி என்பது அனைவருக்கும் ஏற்றது அல்ல, நீங்கள் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கலாம். ஆனால் தலைமைத்துவம் வேறுபட்டது, நீங்கள் உங்கள் சொந்த ஆட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு 10 வீரர்கள் அல்லது 20 வீரர்களை கூட கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது நீங்கள் பல சந்திப்புகளை நிகழ்த்த வேண்டும். வளைகளில் நிற்க வேண்டும். வீரர்களோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று பல விஷயங்கள் இதில் இருக்கிறது” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -