தெஆ அணி இந்த ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டுமே பயப்படும்.. முதல் டெஸ்ட்ல இதுதான் வித்தியாசம் – அபிஷேக் நாயர் கருத்து

0
86
Nayar

நாளை மறுநாள் தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ஒரே ஒரு இந்திய வீரரை பற்றி மட்டுமே அதிகமாக விவாதிக்கும் என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவில் விளையாட இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவின் எழுச்சி

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பலம் மிகுந்த ஆஸ்திரேலியா அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி தற்போது உலக சாம்பியனாக இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் வந்து சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்திருக்கிறது.

மேலும் தற்போது தென் ஆப்பிரிக்கா பவுலிங் யூனிட்டில் ஸ்பின் யூனிட் மற்றும் பாஸ்ட் பவுலிங் யூனிட் இரண்டுமே மிகச் சிறப்பானதாக இருக்கிறது. எனவே இவர்களை மடக்குவதற்கு தனிப்பட்ட எந்த ஆடுகளத்தையும் உருவாக்க முடியாது. மேலும் பேட்டிங் யூனிட்டும் வலிமையாகவே இருக்கிறது. ஆனாலும் கூட ஒரு குறிப்பிட்ட இந்திய வீரர் குறித்து தென் ஆப்பிரிக்கா அதிகம் விவாதிக்கும் என அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆபத்தானவராக இருப்பார்

இதுகுறித்து அபிஷேக் நாயர் பேசும்பொழுது ” கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கருப்பு மண் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு கண்டிஷனில் நிச்சயமாக பும்ரா ஆபத்தானவராக இருக்கப் போகிறார். எதிரணி ஒரே ஒரு வீரர் குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் தற்போது தென் ஆப்பிரிக்க அணி மொத்தமும் பும்ரா பற்றி மட்டும்தான் விவாதிக்கும். ஆனால் நீங்கள் அவர் குறித்து எவ்வளவு விவாதித்தாலும் அவரை நீங்கள் எதிர்த்து விளையாடும் பொழுது அது வித்தியாசமானதாக இருக்கும்”

இதையும் படிங்க : தெஆ முதல் டெஸ்ட்.. எங்களுடைய பிளேயிங் XI இதுதான்.. அவருக்கு வாய்ப்பு உறுதி – இந்திய துணை பயிற்சியாளர் பேட்டி

“பும்ரா தாக்குதலில் இருக்கும் பொழுது அது அனைவரையும் திசை திருப்பக் கூடியதாக இருக்கும். மேலும் உங்களுடைய கவனம் அவர் கைப்பற்றும் விக்கெட்டுகளில்தான் இருக்கும். அவருக்கு பணிச்சுமை மேலாண்மை இருந்த போதிலும் கூட தற்போது நிறைய கிரிக்கெட் விளையாடி வருவது ஆச்சரியமானதாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -