கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

நான் சொல்வதை தப்பா எடுத்துக்காதீங்க.. உங்கள் மீதுள்ள நன்மதிப்பில் சொல்கிறேன்.. பும்ராவுக்கு விளக்கம் அளித்த முகமது கையிப்

ஆசிய கோப்பை 2025-ல் ஜஸ்பிரித் பும்ரா தன்னை விமர்சித்ததற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப் பதிலளித்துள்ளார். இந்தியா-வங்கதேச போட்டிக்குப் பிறகு ஒரு சமூக வலைதள பதிவில், கைஃப், பும்ரா காயத்தைத் தவிர்க்க உடல் வார்மாக இருக்கும்போது பந்து வீசுவதை விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

ஆசிய கோப்பை 2025-ல் பும்ரா பவர் பிளேயில் அதிகமாக பந்து வீசியதாகவும், மீதமுள்ள கட்டத்தில் ஒரு ஓவர் மட்டுமே வீசியது வலுவான அணிகளுக்கு எதிராக இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

கையிப் கருத்து:

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கையிப், பும்ரா பொதுவாக 1, 13, 17, 19 ஆவது ஓவர்களில் பந்து வீசுவார். சூர்யாவின் தலைமையில், ஆசிய கோப்பையில், அவர் தொடக்கத்தில் மூன்று ஓவர் ஸ்பெல் வீசினார். காயத்தைத் தவிர்க்க, பும்ரா இப்போதெல்லாம் உடல் சூடாக இருக்கும்போது பந்து வீச விரும்புகிறார்.

மீதமுள்ள 14 ஓவர்களில் ஒரு ஓவர் மட்டுமே வீசுவது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதி, உலகக் கோப்பையில் வலுவான அணிகளுக்கு எதிராக இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஜஸ்பிரித் பும்ரா, கைஃப்பின் இந்த மதிப்பீட்டை தவறானது என்று  பதிலளித்தார். இதற்கு பதிலளித்த  கைஃப், தனது கருத்தை ஒரு நல்லெண்ண கிரிக்கெட் அறிவுரையாக எடுத்துக்கொள்ளுமாறு பும்ராவை வலியுறுத்தினார். மேலும், பும்ரா இந்தியாவின் மிகப்பெரிய போட்டி வெற்றியாளர் என்றும் கூறினார்.

- Advertisement -

பும்ராவுக்கு பதில்:

“இதை ஒரு நல்லெண்ண அறிவுரையாக இருக்க வேண்டும். ஒரு ரசிகரின் கருத்தாகவும் எடுத்துக்கொள்ளவும். நீங்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டி வெற்றியாளர், மைதானத்தில் இந்திய உடையில் முழு முயற்சியுடன் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும்,”  கைஃப்  பதிலளித்தார்.

இதையும் படிங்க: 11வது வீரருக்கு மேல் களமிறங்க போறீங்களா? சூர்யகுமாரை கிண்டல் செய்த முன்னாள் ஆர்சிபி வீரர்

நடப்பு ஆசிய கோப்பை 2025-ல், ஜஸ்பிரித் பும்ரா 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை 22 என்ற சராசரியுடனும், 7.33 என்ற எகானமி ரேட்டுடனும் வீழ்த்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான  சூப்பர் 4 போட்டியில் 2 விக்கெட் இழப்பிற்கு18 ரன்களை விட்டு கொடுத்தார். பும்ரா லீக் சுற்றில்,இரண்டு போட்டிகளில் விளையாடி, ஓமனுக்கு எதிரான கடைசி போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு பின்னர் சூப்பர் 4 போட்டிகளுக்கு திரும்பினார்.

- Advertisement -
Published by

Recent Posts