2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 கட்டத்தில் இலங்கைக்கு எதிரான முக்கியத்துவம் குறைவான போட்டியில் பேட்டிங் ஆர்டரில் பெரிய மாற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை என்று முன்னாள் ஆர்சிபி வீரர் வருண் ஆரோன், நகைச்சுவையாகக் கூறினார். கடந்த லீக் போட்டியில் ஓமானுக்கு எதிரான முக்கியத்துவம் குறைவான ஆட்டத்தில் சூர்யகுமார் தன்னை பேட்டிங் ஆர்டரில் 11வது இடத்திற்கு இறக்கியிருந்தார்.
அபிஷேக் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் நிலையான தொடக்க ஜோடியாக இருக்க, இந்திய அணி பேட்டிங் ஆர்டரில் யாரை வேண்டுமானாலும், மாற்றலாம் என்று முறையை கொண்டு வந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் பெரும்பாலும் 3வது இடத்தில் பேட்டிங் செய்தார்.
ஆனால் ஓமான் மற்றும் சமீபத்திய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
பேட் செய்வாரா?
இந்திய அணி ஓமானுக்கு எதிரான குரூப் போட்டிக்கு முன்பே சூப்பர் 4க்கு தகுதி பெற்றிருந்ததால், சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். மிடில் ஓவர்களில் பேட்டிங் சரிவு ஏற்பட்ட போதிலும், கேப்டன் சூர்யகுமார் மற்ற எல்லா பேட்ஸ்மேன்களையும், பந்துவீச்சாளர்களையும் முன்னால் அனுப்பி, முதல் இன்னிங்ஸில் தான் பேட் செய்யாமல் இருந்தார்.
இறுதியாக, இந்திய அணி 20 ஓவர்களில் 188-8 ரன்கள் எடுத்தபோது, அவர் மட்டுமே பேட் செய்யாத ஒரே வீரராக இருந்தார்.
இது குறித்து பேசிய வருண் ஆரோன், “சூர்யகுமார் யாதவ் என்ற ஸ்டார் இறுதிப் போட்டிக்கு முன், அவரது பேட்டிங் பார்மை குறிப்பாகச் சரி செய்ய விரும்புவார். அவரைப் போன்ற தரமான வீரர் ஒரு தொடர் முழுவதும் அமைதியாக இருப்பது அரிது. இந்த முறை அவர் நிச்சயமாக 11வது இடத்தில் பேட் செய்ய மாட்டார்” என்று வருண் ஆரோன் தெரிவித்தார்.
சூர்யகுமார் செயல்பாடு:
2025 ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் 4 இன்னிங்ஸ்களில் 59 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது சராசரி 29.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 111.32 ஆகும். பேட்டிங் ஆர்டரில் இந்திய அணி அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொண்டுவிட்டதாக வருண் ஆரோன் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதையும் படிங்க: உன் மேல தான் என் கண் இருக்கு – அபிஷேக் சர்மாவுக்கு செயலுக்கு யுவராஜ் சிங் பதிவு
“அவர்கள் இவ்வளவு பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.ஒருவேளை எந்த மாற்றமும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக பும்ரா மட்டுமே இருக்கும். பேட்டிங் ஆர்டரில் அதிகமாக மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன,” என்று வருண் ஆரோன் கூறினார். 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடையாமல் உள்ளது.






