வீடியோ- ஒற்றை கையில் பறந்து கேட்ச்.. முகமது கெயிப்க்கு வயசே ஆகல வெற்றி பெற்றதா கம்பீர் அணி?

0
173

லெஜென்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய மகாராஜா அணியும் அப்ரிடி தலைமையிலான ஆசிய லைன்ஸ் அணிகளும் மோதின. தோஹாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆசிய லைன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய உபுல் தரங்கா, தில்சான் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

- Advertisement -

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்களை சேர்த்தது. இதில் 30 பந்துகளில் உபுல் தரங்கா அரை சதம் அடித்து அசத்தினார். எனினும் ஓஜா வீசிய பந்தை உபுல் தரங்கா கவர் திசையில் பவுண்டரிக்கு அடிக்க முயன்றார். ஆனால் அங்கு நின்ற முகமது கைஃப் யாருமே எதிர்பாராத வகையில் ஒற்றை கையில் பாய்ந்து தரையோடு சென்ற பந்தை பிடித்து அசத்தினார்.

இதன் மூலம் ஷாக் ஆகி நின்ற  தரங்கா பெவிலியின் திரும்பினார். இதில்  தில்சான் 27 ரன்களிலும், முகமது ஹபீஸ் 38 ரன்களிலும் ஆட்டமிழக்க, இறுதியில் ஆப்கான் வீரர் அஸ்கான் மற்றும் பெரேரா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இதனால் ஆசிய லைன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இந்திய மகாராஜா அணி விளையாடியது. இதில் உத்தப்பா 15 ரன்கள் ஆட்டம் இழக்க கேப்டன் கம்பீர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஃபெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. குறிப்பாக முகமது கைஃப், ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதன் பிறகு விளையாடிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கம் ரன்களில் நடையை கட்டினர். இதனால் இந்திய மகாராஜா அணி 106 ரன்கள் சுருண்டு தோல்வியை தழுவியது.

இதில் சோஹேல் தன்வீர், அப்துல் ரசாக், முகமது ஹபீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இந்த தொடரில் இந்திய வீரர்கள் சிலர் தங்களுடைய பழைய ஆட்டத்தை காட்டியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போட்டியில் தோற்றாலும் முகமது கைஃப் 42 வயதிலும் தனது அசத்தலான கேச்சை பிடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறார்.