இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி மீது மொகமத் அசாருதீன் கடுமையான விமர்சனம்!

0
152
Mohammed azharuddin

தற்போது இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இந்தியப் பெண்கள் அணியும் விளையாடி வருகிறது!

மொத்தம் 8 அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்த தொடரில், 8 அணிகளை இரு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளை வைத்து அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெல்லும் அணிகள் இறுதிப்போட்டிக்கு கொண்டுவரப்படும்!

- Advertisement -

இதில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணி ஒரு தோற்றும், பார்படோஸ் பாகிஸ்தான் அணிகளோடு வென்றும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்பு அரையிறுதியில் காமன்வெல்த்தில் நடத்திவரும் இங்கிலாந்து அணியோடு மோதி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது!

நேற்று பர்மிங்காம் நகரில் எஜ்பஸ்டன் மைதானத்தில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியோடு இந்திய அணி மோதியது. இந்த போட்டி நேற்று இரவு இந்திய நேரப்படி ஒன்பது முப்பது மணிக்கு நடந்தது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி கேப்டன் மெக் லேணிங் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்ட வீராங்கனை மூனி 61 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, செபாலி வர்மா இருவரும் ஏமாற்றம் அளித்தனர. ஆனால் அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்டரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் மிக பொறுப்பாகவும் சரியாகவும் விளையாடி அணியை வெற்றியை நோக்கி கொண்டு வந்தனர். மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதம் அடித்தார்.

இந்த நிலையில் 14.2 ஓவர்களில் 118 ரன்கள் 2 விக்கெட் இழப்பிற்கு எடுத்திருந்த இந்திய அணி அடுத்த எட்டு விக்கெட்டுகளை வெறும் 34 ரன்களுக்கு இழந்து 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நடுவரிசை வீராங்கனைகள் பொறுப்பற்ற முறையில் விளையாடியதால் 9 ரன்கள் வித்தியாசத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டது.

கையில் 8 விக்கெட்டுகள் இருந்தும், கடைசி 5 ஓவர்களில் ஒரு ஓவருக்கு 8 ரன்கள் வீதம் மட்டுமே தேவைப்பட்டும் இந்திய வீராங்கனைகள் பொறுப்பற்ற முறையில் விளையாடியதால் தங்கப்பதக்கத்தை தவறவிட்டு உள்ளனர். உண்மையில் போட்டியை பார்த்த இந்திய ரசிகர்களை இது பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

இந்த ஆட்டம் குறித்து தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கடுமையான தனது விமர்சனத்தை ட்விட்டரில் வைத்திருக்கிறார் முன் வைத்திருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது ” இந்திய அணி அறிவில்லாமல் தனது குப்பையான பேட்டிங்கால் சுலபமான வெற்றியை ஒரு தட்டில் வைத்து ஆஸ்திரேலிய அணிக்கு தாரைவார்த்து விட்டது” என்று கடுமையாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியைச் சாடியிருக்கிறார்!