தென் ஆப்பிரிக்கா வரட்டும்.. அதுக்காக காத்துகிட்டு இருக்கேன்.. என்னோட பிளான் இதுதான் – சிராஜ் பேச்சு

0
50
Siraj

இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. தற்போது இதில் முதலில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தான் காத்திருப்பதாக முகமது சிராஜ் கூறியிருக்கிறார்.

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது. இதனால் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன் ஆகவும் இருந்து வருகிறது. இந்திய அணிக்கு தற்போது சொந்த மண்ணில் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் தென் ஆப்பிரிக்கா அணியை வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

- Advertisement -

ரோகித் வார்த்தையை உடைத்த சிராஜ்

கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் முகமது சிராஜ் பந்துவீச்சு மிகுந்த கேள்விக்குறிக்கு உள்ளானது. அந்தத் தொடருக்குப் பிறகு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பழைய பந்தில் முகமது சிராஜ் தாக்கத்துடன் இல்லை என்று கூறியிருந்தார். இதனால் அவரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யவில்லை.

இதற்குப் பிறகு இங்கிலாந்துக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர இந்திய அணி சமம் செய்வதற்கு முக்கிய காரணமாக முகமது சிராஜ் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் அவரது பந்துவீச்சு ரிதம் சிறப்பாக இருந்தது. இப்போது இந்திய வேகப்பந்து வீச்சு யூனிட்டில் முகமது சிராஜ் முக்கியமானவராக மாறி இருக்கிறார்.

- Advertisement -

நான் காத்துக் கொண்டிருக்கிறேன்

இதுகுறித்து முகமது சிராஜ் பேசும் பொழுது ” தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கும் மேலும் அவர்கள் உலக சாம்பியனாக இருப்பதாலும் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் தற்போது பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தாலும், நாங்கள் நல்ல பாசிட்டிவான மனநிலையில் இருக்கிறோம்”

இதையும் படிங்க : ஐபிஎல் மினி ஏலம்.. சிஎஸ்கே இந்த 3 வீரர்களை கட்டாயம் வாங்கும்.. வேற மாதிரி டீமா மாறும் – அஸ்வின் கணிப்பு

“நாங்கள் வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தோம். உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றோம். தனிப்பட்ட முறையில் நான் நல்ல ரிதத்துடன் பந்து வீசி வருகிறேன். வலுவான அணிகளை எதிர்கொள்வது நாம் பந்துவீச்சில் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய இடங்களை அடையாளம் காட்டுகிறது. எனவே நான் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -