சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முகமது ஷமி பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கை மறைமுகமாக விமர்சனம் செய்து பேசுவது போல கருத்து ஒன்றைக் கூறியிருந்தார். என்ன நிலையில் முகமது ஷமி அப்படி பேசி இருக்கக் கூடாது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றதில் இருந்து இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருப்பதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏதோ ஏமாற்றுகிறது என்பது போல பாகிஸ்தான் தரப்பிலிருந்து சில வீரர்கள் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் பதினைந்தாவது ஓவரிலேயே சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது, தந்தை சேதப்படுத்தாமல் இப்படி நடக்காது என்பது போல இன்சமாம் உல் ஹக் கூறி இருந்தால். இதை நடுவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பேசி இருந்தார். இதற்கு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பதிலடியும் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து இப்படி தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவது குறித்து பேசி இருந்த முகமது ஷமி கூறும் பொழுது பாகிஸ்தான் நல்ல அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அணி தேர்வில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இது இமாம் உல் ஹக்குக்கு அவருடைய மாமாவான இன்சமாம் உல் ஹக் தேர்வுக்குழு தலைவராக இருந்து சலுகைகள் காட்டினார் என்பது போல முகமது ஷமி மறைமுகமாக பேசியிருந்தார் என்று எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சல்மான் பட் முகமது ஷமி அப்படி பேசி இருக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சல்மான் பட் கூறும் பொழுது “உறவு மற்றும் நட்பின் அடிப்படையில் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்யக்கூடாது. முகமது ஷமியின் கருத்துக்கள் இன்சமாமை குறிவைத்து இருந்தன.தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் அணியை தேர்ந்தெடுப்பதாக அவர் இன்சமாமை குறி வைத்துதான் பேசினார். இதுதவறு என்று நினைக்கிறேன். ஏனென்றால் இமாமின் புள்ளி விபரங்களை பார்த்தால் புரியும். மேலும் அவர் சரியாக விளையாடாத பொழுது அணியை விட்டும் நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க : பும்ரா கிடையாது.. நான் சந்தித்த பவுலர்களில் இவர்தான் கஷ்டமானவர் – பாபர் அசாம் ஏபி டிவில்லியர்ஸ்க்கு பதில்
இந்திய அணி குறித்து சில சர்ச்சையான கருத்துக்கள் வந்தது உண்மைதான். இன்சமாம் ஏதோ சொன்னார் பிறகு அதற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் பதில் கூறியிருந்தார். ஆனால் உறவினர் என்பதற்காக இன்சமாம் ஒருவரை அணியில் தேர்ந்தெடுத்தார் என்று முகமது ஷமி கூறுவது சரியானது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






