“கோலிதான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. ஆனா இந்த இந்திய பேட்ஸ்மேன் வேற மாதிரி” – முகமது சமி கருத்து

0
106
Shami

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பேட்டிங் யூனிட்டில் இந்திய அணி விராட் கோலியை தவற விடுகிறதோ அதேபோல பவுலிங் யூனிட்டில் முகமதுச மியை தவற விடுகிறது.

முகமது சமி கணுக்கால் காயத்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற முடியாமல் என்சிஏவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

இந்திய அணியில் பும்ராவுக்கு அடுத்து இரண்டு போட்டிகளிலும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்ட முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் இருவராலும் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இதே இடத்தில் முகமது சமி இருந்திருந்தால் அவருடைய அப்-ரைட் சீம் பந்துவீச்சில் பும்ராவுக்கு மிகப்பெரிய துணையாக இருந்திருப்பார். தற்போது ஒரு முனையை இந்திய அணி தவற விடுகிறது.

முகமது சமியை பொறுத்தவரை அவருக்கு அனுபவம் கிடைக்கக் கிடைக்க அவருடைய பந்துவீச்சு பேட்ஸ்மேன்கள் விரும்பத்தகாத ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களே அவருடைய பந்துவீச்சை சந்திக்க விரும்புவதில்லை என தினேஷ் கார்த்திக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் காயத்தால் அவர் இங்கிலாந்து தொடரை தவற விட்டு இருப்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறது. விராட் கோலி இல்லாமல் இருந்து முகமது சமி இருந்திருந்தாலும் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி தோற்று இருக்காது.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சுவாரசியமான பதில் அளித்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது “இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்றால் அது விராட் கோலிதான். அவரது சாதனைகளை அவர் யாரென்று சொல்லும். அவர் இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார். அதே சமயத்தில் உலகத்தின் சிறந்த பேட்ஸ்மேனும் அவர்தான்.

இதையும் படிங்க : “நான்தான் அடுத்த ஷேன் வார்னே.. விராட் கோலியை அவுட் செய்வேன் ” – இங்கிலாந்து ரேகான் அகமத் பேச்சு

அதே சமயத்தில் உலகின் ஆபத்தான பேட்ஸ்மேன் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது ரோகித் சர்மாதான்.அவர் ஒரு அழிவுகரமான பேட்ஸ்மேன். மிகப் பயங்கரமாக பந்துகளை அடிப்பார்” என்று கூறி இருக்கிறார்.