என்னால நம்பவே முடியல..கோலி பலவீனத்தை புவி ரஞ்சிலயே யூஸ் பண்ணி இருக்காரு – முகமது கைப் பேட்டி

0
772

இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டுத் தொடரான ரஞ்சி டிராபியில் குரூப் டி பிரிவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் விளையாட உள்ளன. இதில் விராட் கோலி 13 வருடங்களுக்குப் பிறகு டெல்லி அணிக்காக களமிறங்க உள்ளார்

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் விராட் கோலி குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரஞ்சி போட்டியில் விராட் கோலி

இந்திய சர்வதேச கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்த விராட் கோலி சமீபகாலமாக ரெட் பால் கிரிக்கெட்டில் மோசமான பேட்டிங் ஃபார்மை சந்தித்து வருகிறார். அவர் கடைசியாக விளையாடிய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடியதன் விளைவாக இந்திய அணி அந்த தொடர்களில் தோல்வியை சந்தித்தது பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.

அதிலும் குறிப்பாக விராட் கோலி கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவுட் சைடு ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு தொடர்ச்சியாக 8 முறை ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை உள்நாட்டு தொடரில் விளையாட அறிவுறுத்திய நிலையில் இன்று டெல்லி அணிக்காக அவர் களமிறங்க உள்ளார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் விராட் கோலிக்கு ரஞ்சித் தொடரிலேயே இந்த பிரச்சனை இருந்திருப்பதாகவும் தற்போது வரை இவர் அதே முறையில் ஆட்டம் இழந்து வருவது தன்னால் நம்ப முடியவில்லை என்று சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

என்னால் நம்பவே முடியவில்லை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” 2012 ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டி தான் விராட் கோலியின் கடைசி ரஞ்சி டிராபி என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருக்கு முன்பு இருந்த பலவீனம் இன்னும் இருக்கிறது. புவனேஸ்வர் குமார் அவரை இரண்டு முறை இதே முறையில் அவுட் செய்த விதம், விராட் கோலிக்கு அந்த பலவீனம் இன்னும் இருக்கிறது என்பதை நம்பவே முடியாதபடி உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் அவர் எப்படி அவுட் ஆனாரோ அதே மாதிரி தான் ரஞ்சித் தொடரின் கடைசி போட்டியிலும் அவர் அவுட் ஆகி இருக்கிறார்.

இதையும் படிங்க:54 பந்துகள் மீதம்.. வெறும் 11 ஓவரில் எம்ஐ வெற்றி.. பிளே ஆப்க்கு தகுதி.. 10 விக்கெட்டில் சன்ரைசர்ஸ் மோசமான தோல்வி

அவரது பேட் கீழ் பகுதியில் இறுக்கமான பிடிப்பால் ஆப் ஸ்டம்பகளுக்கு வெளியே தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடைந்த அந்தஸ்து உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 50 சதங்கள் அடித்து இருக்கிறார்” என்று முகமது கைஃப் கூறியிருக்கிறார். ரஞ்சித் தொடரில் கடைசி போட்டியில் விளையாடிய விராட் 14 மற்றும் 43 ரன்களுக்கு புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் இரண்டு முறை ஆட்டம் இழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -