54 பந்துகள் மீதம்.. வெறும் 11 ஓவரில் எம்ஐ வெற்றி.. பிளே ஆப்க்கு தகுதி.. 10 விக்கெட்டில் சன்ரைசர்ஸ் மோசமான தோல்வி

0
423

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 25 வது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர் கேப் அணிகள் மோதி விளையாடின.

இதில் அபாரமாக செயல்பட்ட எம்ஐ கேப்டவுன் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்

நியூலான்ட்ஸ் கேப் டவுனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற எம்ஐ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டோனி டி சார்ஜி இரண்டு ரன்னில் ரபாடாவின் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய அபெல் போஸ் பந்து வீச்சில் வெளியேற, கேப்டன் மார்கரம் 10 ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய ஸ்டெப்ஸ் 5 ரன், மார்க்கோ ஜான்சன் 7 ரன்னில் நடையை கட்ட, சிமிலென் 22 பந்துகளை எதிர் கொண்டு 21 ரன்கள் எடுத்தார்.

இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய பெடிங்காம் 45 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்ததால்தான் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை கடந்தது. இறுதியாக சன்ரைசர்ஸ் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சை பொறுத்தவரை ரபாடா இரண்டு விக்கெட்டுகளும், போஸ் 3.2 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் ரசித் கான் மற்றும் பிரவீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

எம்ஐ கேப்டவுன் அபார வெற்றி

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி எம்ஐ கேப் டவுன் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வான்டர் டசன் மற்றும் ரிக்கல்டன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த இருவர் கூட்டணியே சிறப்பாக விளையாடி எம்ஐ கேப் டவுன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. வான்டர் டசன் 30 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸ் என 48 ரன்கள் குவிக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 36 பந்துகளை எதிர் கொண்டு 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 56 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையும் படிங்க:4வது ஸ்டம்ப் லைனில் பந்து வீச சொல்லி கோலி சொன்னாரா? டெல்லி வீரரின் சுவாரசிய பதில்.. ரஞ்சி டிராபி 2025

இந்த இருவர் கூட்டணியே கடைசி வரை களத்தில் நின்றதால் இறுதியாக எம்ஐ அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்து 54 பந்துகளை மீதம் வைத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி பெற்றதன் மூலம் எம்ஐ அணி இரண்டாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள எம்ஐ அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -