ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே பார்படாஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இதுவரையில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த நிலையில் தோனி போல அவர் கதாநாயகன் ஆவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக முகமது கைப் கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி 15 போட்டிகளில் 741 ரன்கள் குவித்தார். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் காம்பினேஷனுக்காக அவரை துவக்க ஆட்டக்காரராகக் கொண்டு வந்தார்கள். ஆனால் ஐபிஎல் தொடர் போல அவரால் அதே ஆக்ரோஷத்தோடு டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியவில்லை.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் விராட் கோலி முதலில் பந்துகளை எடுத்து பின்பு தாக்கி விளையாடுவதற்கு தகுந்தது போல் சரியாக இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் அணுகுமுறை முதல் பந்தில் இருந்து அடிப்பதாக இருக்கிறது. இதன் காரணமாக விராட் கோலியால் விளையாட முடியவில்லை. ஆனால் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த போட்டியிலும் பெரிய ரன்கள் எடுக்காமல் இறுதிப் போட்டியில் தோனி சிறப்பாக விளையாடி கதாநாயகன் ஆனது போல விராட் கோலி ஆகலாம் என முகமது கைப் கூறியிருக்கிறார்.
இது குறித்து முகமது கைப் கூறும் பொழுது ” மகேந்திர சிங் தோனி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஃபார்ம் இல்லாமல் இருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் அவர் ஆட்டம் இழக்காமல் 91 ரன்கள் குவித்து கதாநாயகன் ஆனார். குலசேகராவின் ஓவரில் அவர் அடித்த கடைசி சிக்ஸர் அனைவரது மனதிலும் நின்று விட்டது. இதே போல ஒரு வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்திருக்கிறது. அவர் ஹீரோ ஆக முடியும் என்று நம்புகிறேன்.
2011ஆம் ஆண்டு தோனி சிறப்பாக விளையாடவில்லை என்பதை விராட் கோலி மனதில் கொள்ள வேண்டும். ஆனால் இறுதிப் போட்டியில் அவரால் ஃபார்முக்கு வர முடிந்தது. விராட் கோழியை பொறுத்தவரையில் பந்துக்கு தகுந்தபடி விளையாடுவதில் அவர் சிறந்தவர். அவர் அதே முறையில் விளையாடினால் மீண்டு வர முடியும்
இதையும் படிங்க : ஐசிசி இன்னைக்கு எங்களுக்கு அதை தர மாட்டாங்க.. பசங்க அகமதாபாத்த மறந்து தயாராயிட்டாங்க – ராகுல் டிராவிட் பேச்சு
விராட் கோலி மோசமான ஃபார்மில் இருப்பதை மறந்து விட வேண்டும். அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சிறப்பாக விளையாடியிருந்தார். அந்த போட்டியில் அவர் மந்தமாக இல்லாமல் அதிரடியாகவே விளையாடியிருந்தார். அன்று அவர் பந்துகளுக்கு தகுந்த ஷாட் விளையாடினார்” என்று கூறியிருக்கிறார்.






