நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே இன்று நடைபெறும் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, அவரை மிகச் சிறப்பாக வழி அனுப்பி வைக்க இந்திய வீரர்கள் நினைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இறுதிப் போட்டி குறித்து ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது மிகப்பெரிய மனக்காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இந்திய வீரர்கள் அதைத் தாண்டி விளையாடி மீண்டும் ஒரு இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார்கள்.
இது குறித்து பேசி இருக்கும் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “எங்கள் வீரர்கள் ஒரு விஷயத்தில் இருந்து நகர்வதிலும் ஒரு விஷயத்தை அங்கீகரிப்பதிலும் மிகவும் சிறந்தவர்கள். எனவே நாங்கள் அகமதாபாத் தோல்வியிலிருந்து நகர்வோம். அவர்கள் வரலாற்றைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இது ஒரு புதிய நாளாக இருக்கும்.
இரண்டு நல்ல அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த தொடரில் இந்த இரண்டு அணிகளும் சிறந்த அணிகளாக வந்திருக்கின்றன என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். எனவேஇன்று நடப்பது ஒரு சிறந்த போட்டியாக இருக்கும். இந்த போட்டியில் நாங்கள் மிகவும் நம்பிக்கை உடன் இருப்போம்.
நாங்கள் தொடர்ந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருவது மிகவும் நல்லது. நாங்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டின் இறுதி போட்டிக்கு வந்திருக்கிறோம். இதன் பெருமை வீரர்களுக்குதான். நாங்கள் சரியான முறையில் விளையாடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இதையும் படிங்க : மேட்ச் எந்த இடத்துல இருந்தாலும் எங்களால ஜெயிக்க முடியும்.. இப்ப நாங்க சோக்கர்ஸ் கிடையாது – எய்டன் மார்க்ரம் பேட்டி
நாங்கள் இங்கு பார்படாஸ் மைதானத்தில் ஏற்கனவே விளையாடி இருப்பது மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு இந்த பரீட்சையம் இருப்பது நல்லது. ஆனால்மீண்டும் இது ஒரு கடினமான நாள் என்று நினைக்கிறேன்.கடந்த முறை விளையாடிய விக்கெட்டை எங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். புதிய விக்கெட்டில்தான் விளையாடுவோம். எனவே இது ஒரு புதிய போட்டி” என்று கூறி இருக்கிறார்.






