தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில் அவரை இர்ஃபான் பதான் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் ஆதரித்தனர்.
ஆனால் ரோஹித் சர்மா எடுத்த முடிவு குறித்து மற்றொரு இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.
திடீரென வெளியேறிய ரோஹித் சர்மா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் இருந்து இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா மொத்தமாக மூன்று போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி அதில் இரண்டு போட்டிகளில் தோல்வியும் மற்றும் ஒரு போட்டி ட்ரா என்று இருந்த நிலையில் ஐந்தாவது போட்டியில் இருந்து தான் கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக அறிவித்தார். மோசமான பேட்டிங் ஃபார்ம் மற்றும் கேப்டன்சி காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் அந்த போட்டியின் போது கூறினார்.
இந்த சூழ்நிலையில் ஐந்தாவது போட்டியில் அணியை வழி நடத்திய பும்ரா காயம் காரணமாக போட்டியின் பாதியில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக பழைய கேப்டன் விராட் கோலி மீண்டும் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். இந்தியா வீரர்களுக்கு ரோஹித் முன்னாள் நின்று தனது அணியை முன்னோக்கி எடுத்துச் சென்று இருக்க வேண்டும் என்று முகமது கைப் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து முகமது கைஃப் கூறும் பொழுது ” ரோகித் சர்மா இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட கூடாது என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் இந்திய அணிக்கு மிகவும் தேவைப்பட்டார். அவர் விளையாடி இருக்க வேண்டும். ரன் குவிக்காவிட்டாலும் ரோஹித் விளையாடி இருக்க வேண்டும். அந்தத் தொடரில் பெரும்பாலான முன்னணி வீரர்கள் யாருமே பெரிதாக ரன் எடுக்கவில்லை. விராட் கோலி, கவஜா, லாபுசாக்னே போன்றோர் கூட பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இனி விளையாடக் கூடாது
ஸ்மித் தாமதமாகவே பேட்டிங் ஃபார்முக்கு வந்தார். இந்த நிலையில் ரோகித் சர்மா ஒரு ஆதரவாளராக தனது அணிக்கு முன் நின்று இருக்க வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸின் போது பும்ரா காயம் காரணமாக வெளியேறினார். அப்போதுதான் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தேவையாக இருந்தார். ரோகித் இரண்டு ஆண்டுகளாக கேப்டனாக இருப்பதால் ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் போன்றோர் குறித்து நன்றாக அறிந்திருப்பார்.
இதையும் படிங்க:கோலிகிட்ட அதை யாரும் பேச முடியாது.. அது அவரோட தனிப்பட்ட உரிமை – முன்னாள் ஆர்சிபி வீரர் பேட்டி
பல வருடங்களாக கேப்டனாக இல்லாமல் இருந்த விராட் கோலி திடீரென்று பொறுப்பேற்றார். சிராஜ் மற்றும் ஜடேஜாவிடம் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், மற்றும் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா இக்கட்டான நிலையில் அழுதத்தில் விளையாடினார். எனவே இந்த இளம் வீரர்களுக்கு யார் ஆதரவு கொடுப்பது?. ஆதரவு கொடுக்க வேண்டிய நேரத்திலேயே ரோஹித் சர்மா இல்லாததால் இனி அவர் விளையாட கூடாது” என்று கூறியிருக்கிறார்.






