ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடைபெற்று முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் ஆர்சிபி அணியின் முன்னாள் சக வீரருமான ஃபாப் டூ பிளசிஸ் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த விராட் கோலி சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய நிலையில் அவர் திரும்பவும் பழைய பேட்டிங் ஃபார்ம்க்கு வந்து விட்டார் என்றே அனைவரும் கருத்தினார்கள். ஆனால் விராட் கோலி அடுத்த நான்கு போட்டிகளிலும் ஒரே மாதிரியாக அவுட் ஆகி வெளியேறினார். இது ரசிகர்கள் மற்றும் இந்திய முன்னாள் வீரர்களை சற்று கோபமடைய வைத்திருக்கிறது என்பது தான் மறக்க முடியாத உண்மை.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி டெஸ்ட் தொடரில் தடுமாறுகிறார் எனவும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் தற்போது கருத்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை பாப் பேசி இருக்கிறார். ஓய்வு முடிவைப் பற்றி யோசிப்பது குறித்து அவருக்கு மட்டுமே முழு அதிகாரம் இருக்கிறது எனவும் வேறு யாரும் அதில் தலையிட முடியாது எனவும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அது அவருக்கு மட்டுமே தெரியும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி போன்ற ஒரு வீரர் மிகவும் உந்துதல் பெற்றவர் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர் கிரிக்கெட்டில் எல்லாவற்றையும் கடந்து விட்டார். எனவே இனி என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஓய்வு பெறுவது குறித்து அது அவரவர் தனிப்பட்ட கருத்து. ஒரு வீரராக அந்த நேரம் எப்போது என்று யாரும் உங்களிடம் பேச முடியாது. அது உங்களுக்கு மட்டுமே முழுமையாக தெரியும். டெஸ்ட் கிரிக்கெட் கண்ணோட்டத்தை பொறுத்தவரை எனக்கு அது நிச்சயமாக தெரியும்.
இதையும் படிங்க:மற்ற கேப்டனுக்கும் பும்ராவுக்கும் இதுதான் வித்தியாசம்.. அவர் வந்தா ஆச்சரியம் இல்லை – சுனில் கவாஸ்கர் கருத்து
எனக்கு இப்போது அதே பசி, ஓட்டம் என்பது நிச்சயம் இல்லை. அந்த நிலை அப்போது நான் டி20 உலகில் அடி எடுத்து வைப்பதற்கும் புதிய தோழர்களை சந்திப்பதற்கும் தகுந்த நேரம் என்று முடிவெடுத்தேன். எனது ஆட்டத்தில் நான் முதலிடத்தில் இருப்பதாக உணர்ந்த காலகட்டத்தில் அதனை செய்ய விரும்பினேன்” என்று கூறியிருக்கிறார். விராட் கோலி இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 190 ரன்கள் மட்டும் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.