ஒரு மேட்ச் தோத்தா பரவால்ல.. தோனி இதுக்குதான் விட்டு கொடுத்தார்.. பவுலர்ஸ் எச்சரிக்கையா இருங்க – முகமது கைஃப்

0
654

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் டோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே தோல்வி

நேற்று நடைபெற்ற போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 20 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கில் களமிறங்கிய விதம் குறித்து தற்போது பெரிய விமர்சனம் உருவாகி வருகிறது. நேற்றைய போட்டியில் தோனி ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிறகு ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். மிடில் வரிசையில் ஒரே பவர் ஹிட்டராக இருக்கும் டோனி ஒன்பதாவது இடத்தில் களமிறங்கியது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்தாலும் அது அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை.

- Advertisement -

தோனி விட்டு கொடுத்தார்

இந்த சூழ்நிலையில் இது குறித்து முகமது கைப் கூறும் போது ” தோனி ஏன் தாமதமாக வருகிறார் என்று யோசித்துப் பார்த்தால் ஒருவேளை இது நீண்ட சீசன் என்றும், எதிர்காலத்தில் காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் நினைக்கலாம். எனவே கடைசியில் மூன்று முதல் நான்கு ஓர்கள் வரை பேட்டிங் செய்வது அவரது திட்டமாக இருக்கலாம். இந்த போட்டியில் அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிறகு ஒன்பதாவது இடத்தில் களமிறங்கினார்.

இதையும் படிங்க:பும்ரா எப்போது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவார்.? கோச் ஜெயவர்த்தனே கொடுத்த முக்கிய அப்டேட்

அவர் சிக்ஸ் அடிக்கிறார், ஆனால் ஒவ்வொரு முறையும் அடிப்பார் என்று நம்பக்கூடாது. அதற்காகத்தான் அவர் தனக்கு நேரம் கொடுத்து விளையாடுகிறார். க்ருனால் பாண்டியா முதல் பந்தில் பவுன்சர் வீசிய பிறகு அதற்கு அடுத்த இரண்டு பந்துகளில் தோனி சிக்ஸ் அடித்தார். அதாவது பேட்டிங்கில் ஓரளவு பார்மை பெறுவதற்காக ஒரு போட்டியை விட்டுக் கொடுத்தார். அணி தோற்றாலும், அவர் மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்ப விரும்பினார். அவருக்கு வயது 43 எனவே இஞ்சின் பழையது. எனவே மீண்டும் அதை மாற்றி அமைக்க தோனி ஒரு போட்டியை விட்டு கொடுத்திருக்கிறார். எனக்கு இந்த போட்டியில் இரண்டு கதைகள் உள்ளன. விராட் கோலிக்கு ஒரு பவுன்சர் போடப்பட்ட பிறகு அடுத்த பந்தில் சிக்சர் அடித்தார். தோனியும் அதையே செய்தார். எனவே இனி வரவிருக்கும் போட்டிகளுக்கு முன்பாக பந்து வீச்சாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -