இந்திய கிரிக்கெட்

விராட் கோலி சும்மா சாதிக்கல.. அபிஷேக் அத ஞாபகத்துல வச்சு இத செய்யணும் – முகமது கைஃப் அறிவுரை

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தன்னுடைய ரன் ஆவரேஜை எப்படி 50க்கு மேல் வைத்திருக்கிறார் என்பதை புரிந்து அபிஷேக் சர்மா தானும் அந்த வழியில் விளையாட வேண்டும் என முகமது கைஃப் அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 118 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் பொழுது, அபிஷேக் ஷர்மா அதிரடியாக 18 பந்தில் 35 ரன்கள் பவர் பிளேவில் எடுத்தார். இதன் காரணமாக ஆட்டம் பவர் பிளேவிலேயே யார் பக்கம் என்பது தெரிந்து விட்டது. ஆனால் அவர் தொடர்ந்து சிக்சர் அடிக்க முயற்சி செய்து ஆட்டம் இழந்தார்.

விராட் கோலியை பாருங்கள்

தற்போது ஏபி.டிவில்லியர்ஸ் வரை அபிஷேக் ஷர்மா எல்லா பந்துகளையும் அடிக்க நினைக்க கூடாது என அறிவுரை கூறி வருகிறார்கள். அவருக்கு ஒரு துவக்கம் கிடைக்கும் பொழுது பெரியதாக மாற்றுவதற்கு கொஞ்சம் பொறுமையான அணுகு முறையை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அபிஷேக் ஷர்மா ஒரே வேகத்தில் விளையாடுகிறார்.

இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது “நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா பெரிய நம்பிக்கையை பெற்றெடுக்க மாட்டார். தனக்கு கிடைத்த துவக்கத்தை 60 அல்லது 70 ரன்கள் ஆக மாற்றும் வாய்ப்பை தான் விட்டுவிட்டதாக ஏமாற்றம் அடைந்திருப்பார். 35 ரன்கள் உங்களுக்கு கிடைக்கும் பொழுது நீங்கள் மேற்கொண்டு கொஞ்சம் பொறுமையாக செல்ல வேண்டும். விராட் கோலி இந்த இடைப்பட்ட நேரத்தில் சரியாக விளையாடாமல் இருந்திருந்தால் அவருடைய ஆவரேஜ் 50 ஆக இருந்திருக்காது. எனவே அபிஷேக் ஷர்மா இதை கவனத்தில் கொள்ள வேண்டும்”

- Advertisement -

இதைக் கற்றுக் கொள்ள வேண்டும்

“அபிஷேக் ஷர்மா இளமையாக இருக்கின்ற காரணத்தினால் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் பவர் பிளேவில் சிக்ஸர் அடிக்கிறார் என்பது சரி. ஆனால் ஒரு 35 ரன்கள் கிடைக்கும்போது அங்கிருந்து மேற்கொண்டு ஒரு 15 ரன்கள் எடுப்பதற்கு, சூழ்நிலைக்கு ஏற்ப அவர் கவனமாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: கில்லை பத்தி உங்களுக்கு தெரியாது.. என் நண்பன் உங்களுக்கு உலக கோப்பை வாங்கி தருவான் – அபிஷேக் ஷர்மா பேட்டி

“ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும், இதே மாதிரி அதிரடியான அணுகு முறையில் எல்லா நேரத்திலும் விளையாடி வென்று விட முடியாது. பவர் பிளேவில் அதிரடி காட்டுவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்குப் பிறகு நம்மை நாம் கொஞ்சம் டியூன் செய்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts