இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பைக்கு என் பிளேயிங் XI இதுதான்.. தமிழக வீரர் மற்றும் கேப்டனுக்கு இடமில்லை – முகமது கைப் தேர்வு

அடுத்து இந்திய அணி பங்கேற்க இருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான தன்னுடைய பிளேயிங் லெவனை முகமது கைப் வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி நீண்ட ஓய்வில் இருக்கிறது. மேலும் இந்த மாத இறுதியில் உள்நாட்டு டெஸ்ட் தொடர் துலிப் டிராபியின் ஆரம்பப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்கள் விளையாட இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் செப்டம்பர் 9ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

முகமது கைப் தெளிவான முடிவு

அடுத்து நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் சேர்க்கப்படுகிறார் என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இவருடன் ஜெய்ஸ்வால் மீண்டும் வருகிறார் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முகமது கைப் தன்னுடைய பிளேயிங் லெவனில் இவர்கள் யாரையும் சேர்க்கவில்லை. ஏற்கனவே கம்பீர் உருவாக்கி வைத்திருக்கும் அணியில் இருந்து மட்டுமே அனைவரையும் தேர்வு செய்திருக்கிறார். புதிதாக யாரையும் உள்ளே கொண்டு வரவில்லை.

- Advertisement -

தமிழக வீரருக்கு இடமில்லை

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாய் ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்த வருண் சக்கரவர்த்தியை தன்னுடைய ப்ளேயிங் லெவனில் முகமது கைப் சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றபடி அவர் வலிமையான அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : சாம்சன் சிஎஸ்கேவுக்கு இல்ல எங்களுக்கு தான்.. கேகேஆர் விரித்த ஆசை வலை.. உச்சகட்ட போட்டி – வெளியான தகவல்கள்

கைப் பிளேயிங் XI : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கே), அக்சர் படேல் (து.கே), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

- Advertisement -
Published by

Recent Posts