இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தனிப்பட்ட வீரர்களை விட அணியை முன்னிறுத்தும் கொள்கை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் திடீரென இடையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இந்தியா திரும்பினார். அப்பொழுது கம்பீர் அவரை அவமதித்து விட்டதாக செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சதத்தை புறக்கணித்த கம்பீர்
சமீபத்தில் ஆஸ்திரேலியா வெள்ளைப்பந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் கடைசிப் போட்டியில் ரோகித் சர்மா சதமும் விராட் கோலி அரை சதமும் அடிக்க இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனாலும் அந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என இழந்தது.
இந்த நிலையில் இந்த போட்டியில் தனிப்பட்ட வீரர்களின் வெற்றியை தன்னால் கொண்டாட முடியாது, ஏனென்றால் இந்தத் தொடரை நாங்கள் இழந்திருக்கிறோம் என கம்பீர் வெளிப்படையாக பேசியது நிறைய சர்ச்சைகளை உண்டு செய்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து அந்த முடிவில் இருந்து வருகிறார்.
நான் நீக்கப்பட்டேன்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பெர்த் டெஸ்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நான் பிளேயிங் லெவனில் நீக்கப்பட்டேன். கம்பீர் வாஷிங்டன் சுந்தரை விளையாடினார். இதனால் என்னுடைய காலம் முடிந்து விட்டது என நான் புரிந்து கொண்டேன். எனவே நான் உடனடியாக ஓய்வு முடிவை அறிவித்தேன்”
இதையும் படிங்க : சஞ்சுவை வைத்து தோனி இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக்கை செய்வார்.. ரசிகர்கள் ஆதரவு பிச்சுக்க போகுது – அனில் கும்ப்ளே கணிப்பு
“இருந்த போதிலும் எனக்கு கம்பீரை பிடிக்கும். அவர் பற்றி பலருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அவர் தனிப்பட்ட வீரர்களை தாண்டி அணிக்கு முன்னுரிமை கொடுப்பவர். அவர் எப்பொழுதும் தனிநபர்களை பாராட்டாமல் அணியை பாராட்டக்கூடியவர். இதை நான் போற்றுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






