நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை ஐபிஎல் தொடரையே ஆட்டிப்படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் கோப்பையை வெல்லாத பஞ்சாப், டெல்லி, பெங்களூர் போன்ற அணிகள் புள்ளி பட்டியலில் டாப் லிஸ்டில் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் அணிகளின் செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ரிட்டையர்டு ஹர்ட் ஆப்ஷன்
நடப்பு ஐபிஎல் தொடரை பொருத்தவரை ஆண்ட அணிகள் என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இந்த முறை அதிக அளவு தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கின்றன. மும்பை அணியில் பாதி அளவு இந்திய வீரர்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில் சில தவறுகளால் இன்னும் புள்ளி பட்டியலில் முன்னேற முடியாமல் தவிக்கிறது. அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தேர்விலேயே சில தவறுகளை செய்திருக்கும் நிலையில் அதுவும் தற்போது கடைசி நிலையில் தத்தளித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் மும்பை அணி கடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் திலக் வர்மா 25 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது மெதுவாக விளையாடுகிறார் என்ற காரணத்துக்காக ரிட்டையர்டு ஹர்ட் செய்யப்பட்டார். இந்திய முன்னணி வீரருக்கு இந்த நிகழ்வு நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல சிஎஸ்கே கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 219 ரன்கள் வெற்றியிலக்கை நோக்கி சென்னை விளையாடிக் கொண்டிருந்தபோது 69 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த கான்வே இதே போன்ற முறையில் வெளியேற்றப்பட்டார்.
இந்த தப்பை செய்யாதீங்க
ஒரு அணியின் முன்னணி இரண்டு வீரர்கள் இதேபோன்று வெளியேற்றப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. நன்றாக செட் ஆகியிருக்கும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை களத்தில் இருந்தால் மட்டுமே அந்த அணியை வெற்றி பெற வைக்க முடியும் எனவும், இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு பதிலாக புதிய வீரர் உள்ளே வந்தால் அவரால் எப்படி உடனே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து முகமது கைப் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:ராஜஸ்தான் அணியின் செல்வாக்கே அந்த ஒருவர்தான்.. அவரை கழட்டி விட்டது ஆச்சரியமா இருக்கு – ராபின் உத்தப்பா பேட்டி
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அணிகள் விரக்தியால் ரிட்டையர்டு அவுட் ஆப்ஷனை அதிகம் பயன்படுத்துகின்றன. இது அரிதாகவே செயல்படும் ஒரு தந்திரமாகும். ஏனென்றால் அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பந்தியிலேயே 6 ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன்கள் மிகக் குறைவு. பெரும்பாலான நேரங்களில் கிரீசில் போராடும் பேட்ஸ்மேன்கள் தான் ஆட்டத்தை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளது. இதற்கு ஒரு நல்ல உதாரணமாக திவேட்டியாவை நினைவில் கொள்ளுங்கள். அவர் முதலில் 19 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த பிறகுதான் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்தார்” என்று கூறியிருக்கிறார்.






