இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சில தினங்களுக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். இருப்பினும் அவர் ஐபிஎல் தொடர் மற்றும் இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் விளையாடுவார் என்று தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஏற்பட்ட அனுபவம் குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக முதன்முதலாக விளையாடினார். அதற்குப் பிறகு பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் என மூன்று விதமான ஐபிஎல் அணிகளில் விளையாடி விட்டு திரும்பவும் சென்னை அணிக்காக அடுத்த வருடம் விளையாட இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்த பிறகு அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
அஸ்வின் தொடர்ந்து ஏதாவது உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் சார்ந்த விஷயங்களிலேயே தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து அப்போதைய டெல்லி அணியின் துணை பயிற்சியாளராக இருந்த முகமது கைஃப் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
அஸ்வினால் நான் ஈர்க்கப்பட்டேன்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஐபிஎல் தொடரில் அஸ்வினுடன் டெல்லி அணிக்காக இரண்டு வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன். 2020இல் டெல்லி அணி இறுதி போட்டிக்கு வந்த போது அஸ்வின் முக்கிய பங்காற்றினார் மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பொல்லார்டு என முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு அவர் டி20 உலக கோப்பை அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். ஸ்மித் அப்போது எங்கள் அணியில் இருந்த போது வலைகளில் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க:யார் இந்த பையன்?. இவனால எப்படி அது முடியும்.. பும்ராவ பாத்து இதான் தோணுச்சு – மைக்கேல் ஹசி பேட்டி
அப்போது அஸ்வினை நான் அவருக்கு பந்து வீச சொன்னேன். ஆனால் அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மறுத்தார். ஏனென்றால் அப்போதுதான் அவரது விளையாட்டைப் பற்றிய ஆழமான பகுப்பாய்வால் நான் ஈர்க்கப்பட்டேன். மேலும் நான் அவரை ஆழமான அஸ்வின் என்று பெயரிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் ஸ்மித் ஹெல்மெட்டில் ஒரு கேமரா இருப்பதால் நான் அவருக்கு பந்து வீச மாட்டேன். ஒருவேளை வீசினால் அவர் அதனை பதிவு செய்து கொண்டு உலகக்கோப்பைக்காக எங்களை அலசுவார். இதனை நான் கவனிக்காத போது அஸ்வின் கவனித்தார். ஒரு சக வீரராக அஸ்வின் அவருக்கு உதவி செய்ய தயாராக இருந்தாரே தவிர, உலக கோப்பைக்கு அல்ல” என்று கூறி இருக்கிறார்.






