யார் இந்த பையன்?. இவனால எப்படி அது முடியும்.. பும்ராவ பாத்து இதான் தோணுச்சு – மைக்கேல் ஹசி பேட்டி

0
33

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழும் பும்ரா முதன் முதலாக 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சிஎஸ்கே முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி பும்ராவின் பந்துவீச்சை வலைகளில் எதிர்கொண்டது குறித்து சில கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

2014ஆம் ஆண்டு அறிமுகம்

இப்போது டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் என அனைத்து விதமான கிரிக்கெட் தொடரிலும் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக திகழ்பவர் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா. இவரது அசாதாரணமான ஆக்சன் மற்றும் பந்து வீசுவதில் இவரது அபாரமான லைன் அண்ட் லென்த் எந்தவிதமான சிறந்த பேட்ஸ்மேனையும் எளிதாக நிலை குலைய வைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு வீரர் 2014ம் ஆண்டு மும்பை அணிக்காக அறிமுகமாகி ஐபிஎல் தொடரில் தனது முதல் விக்கெட்டாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அப்போது 2014 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி இவரது பந்துவீச்சை வலைகளில் எதிர்கொண்டு இருக்கிறார். அப்போது இவரது பந்தின் வேகம் மற்றும் அசாதாரணமான ஆக்சன் ஆகியவை அவரை நிலைகுலைய வைத்திருக்கிறது. மேலும் சிறு குழந்தையாக இருந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத பவுலராக மாறி இருப்பது அவருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக மைக்கேல் ஹசி கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

என்னால் நம்ப முடியவில்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வலைகளில் நான் அவரை எதிர்கொண்டது நினைவிருக்கிறது. உண்மையாக அவரது பந்தில் பேட்டிங் செய்ய முடியவில்லை. அவர் கையில் இருந்து பந்து ரிலீஸ் செய்யும் விதத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அவரது ஆக்சன் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் அவர் கிரீசுக்கு வருவார் என்று ஒருபோதும் நான் நினைக்கவில்லை. அவரது ரன் அப் தடுமாற்றமாக சற்று மோசமாக இருந்தது. ஆனால் யார் அவர்? என்பது போல திடீரென்று ஒரு பந்து 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வந்து என் புருவங்களை உயர்த்தியது.

இதையும் படிங்க:ஸ்மித் பிரச்சனை இதுதான்.. ஆனால் கோலி இந்த இரண்டுக்கும் நடுவில் தடுமாறுகிறார் – கிரேக் சேப்பல் பேட்டி

ஆனால் இந்தியாவில் அவரது பந்து வீச்சு ஆக்ஷனில் நிறைய சந்தேகம் இருந்தது. அவர் ஓடிவரும் விதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நிலைக்க மாட்டார் என்று அனைவரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவருடைய திறமையை என்னால் பார்க்க முடிந்தது. அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசை இருந்தால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரியும். அவர் இப்போது சிறந்த நிலையில் இருக்கிறார் அல்லவா? அவரது இந்த வளர்ச்சி பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களை பயமுறுத்திய வலைகளில் இருந்து தற்போது உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக மாறுவதை பார்ப்பது நம்ப முடியாத வகையில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -