இந்திய கிரிக்கெட்

அக்தர் பாகிஸ்தான் ஜெயிச்சிருந்தா என்னவெல்லாம் பேசுவீங்க.. எங்களை குறைவா காட்ட வேண்டாம் – முகமது கைஃப் பேச்சு

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தொடர்ந்து பாகிஸ்தான் அணியை குறைவாகப் பேசி அதன் மூலம் இந்திய அணியின் திறமையை குறைத்து கூறக்கூடாது என முகமது கைஃப் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ஒருதலைபட்சமாக வென்றது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பை இந்திய முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அக்தர் பேச்சு

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், உள்கட்டமைப்பும் மோசமாக இருந்து வருவதாக கூறி வருகிறார். மேலும் அவர் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான அணி வெல்வது கடினம் என்றும் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் அக்தர் பாகிஸ்தான் அணியை தொடர்ந்து குறைவாக பேசி அதன் மூலம் இந்திய அணியின் திறமையை குறைப்பதாக முகமது கைஃப் கூறியிருக்கிறார். ஒருவேளை பாகிஸ்தான் அணி வென்று சோயப் அக்தர் இந்திய அணியையும் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் விமர்சனம் செய்திருப்பார் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

என்னவெல்லாம் பேசி இருப்பீர்கள்

இதுகுறித்து முகமது கைப் பேசும்பொழுது ” நான் இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்து மகிழ்ச்சியாக இல்லை. ஏனென்றால் நீங்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி வலிமை இல்லை உற்சாகமில்லை என்று சொல்லி வருகிறீர்கள். ஆனால் அப்படிப்பட்ட பாகிஸ்தான் அணி நேற்று இந்திய அணியை வென்று இருந்தால் அக்தர் இந்திய கிரிக்கெட் வாரியம் பெருமை பிடித்தது, இந்திய வீரர்களுக்கு அதிக அகம்பாவம் இருக்கிறது என்று சொல்லி இருப்பீர்கள்”

இதையும் படிங்க : இஷான் தான் உண்மையான துரர்ந்தர்.. பாகிஸ்தான் 17ஆம் நூற்றாண்டு கிரிக்கெட் ஆடிட்டு இருக்கு – சேவாக் பேச்சு

“பாகிஸ்தான் அணியை பலவீனமாக காட்டுவதின் மூலம் நீங்கள் இந்திய அணியின் சிறப்பை குறைத்து விடுகிறீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வாரியம் அமைப்பு ரீதியாக சரியில்லை என்று சொல்லி வருகிறீர்கள். இதற்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts