நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக இஷான் கிஷான் விளையாடிய விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி பல சர்ச்சைகளுக்குப் பிறகு நடைபெற்ற காரணத்தினால் ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இஷான் கிஷான் தன்னுடைய பேட்டிங்கால் போட்டியை ஒரு தலைப்பட்சமாக இந்தியாவின் பக்கம் மாற்றிவிட்டார்.
இஷான் கிஷான் அசாத்தியம்
இந்த போட்டியில் நடைபெற்ற ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக இந்தியா பேட்டிங் செய்யும்பொழுது பந்து ஆடுகளத்தில் நின்று அதே திரும்பவும் செய்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் சரியான டைமிங்கில் விளையாடுவதற்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.
இந்த நிலையில் இஷான் கிஷான் பேட்டிங் யாரும் எதிர்பார்க்காத வகையில் அசாத்தியமாக இருந்தது. பவர் பிளேவில் அதிரடியாக ஆடியவர் பவர் பிளேவுக்கு வெளியில் அதைவிட அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை முதல் 10 ஓவர்களிலேயே உறுதி செய்துவிட்டார்.
உண்மையான துரந்தர்
தற்போது இஷான் கிஷான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது இந்தியா முழுக்க தலைப்புச் செய்தியாக மாறி இருக்கிறது. இந்திய முன்னால் வீரர்கள் பலரும் இஷான் கிசானுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : இந்தியாவுடன் தோல்வி.. இதை இப்படியே விட்டு விடுங்கள்.. 20 வருஷமா இது பழகிடுச்சு – வக்கார் யூனுஸ் வருத்தம்
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “இஷான் கிஷான்தான் துரந்தர் போலவே விளையாடினார். பாகிஸ்தான் பழைய முறையில் 17 ஆம் நூற்றாண்டில் விளையாடுவது போல டி20 கிரிக்கெட் விளையாடியதால் இந்தியாவிற்கு வெற்றி பெறுவது மிகவும் எளிதாக இருந்தது. வழக்கம்போல அவர்களுக்கு இது ஒரு சரியான அடி” என்று கூறியிருக்கிறார்.






