இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் கம்பீர் போட்டிக்கு சரியான திட்டங்களை தீட்டவில்லை என்றும் விராட் கோலி இடம் அவர் பேசும் இடத்திற்கு இன்னும் வரவில்லை என்றும் முகமது கைஃப் விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியான பிளேயிங் லெவனை கொண்டுவர கம்பீர் தவறி இருக்கிறார். மேலும் ஒரே முறையில் ஆட்டம் இழந்து கொண்டிருந்த விராட் கோலியை தடுத்து நிறுத்தி அவரிடம் பேசி பிரச்சினையை சரி செய்யவில்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது.
சிறந்த பயிற்சியாளர் யார்?
இது குறித்து முகமது கைஃப் கூறும் பொழுது “தந்திரோபாயத்தில் சிறந்து விளங்கக்கூடியவரே ஒரு நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும். கண்டிஷனுக்கு ஏற்றபடி ஒரு சரியான அணியை தேர்ந்தெடுக்க அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக எந்த பக்கம் செல்ல வேண்டும் என்று சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இதற்கு அடுத்து விராட் கோலியின் பிரச்சனைகளை தீர்த்திருக்க வேண்டும்”
“அதே சமயத்தில் விராட் கோலியின் பேட்டிங் பிரச்சினைகளை தீர்க்கும் இடத்திற்கு கம்பீர் இன்னும் அணிக்குள் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கவில்லை. அவர்களின் பேட்டிங் பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் இப்படி இதை செய்ய வேண்டும் என்று கூறும் இடத்திற்கு கம்பீர் இன்னும் வரவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவைப்படும். ஆனால் தந்திரோபாய ரீதியாக கம்பீர் சரியாக செயல்படவில்லை”
கம்பீர் திட்டத்தில் செய்த தவறுகள்
“முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியவுக்கு எதிராக பும்ரா பந்துவீச்சால் வெற்றி பெற்றது. நீங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை வைத்து ஏன் விளையாடவில்லை? அதற்கு அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் முதலில் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். மேலும் இப்படியான தந்திரோபாய தவறுகளை எதிர்காலத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : WTC பைனல்.. எங்கள பார்த்தா.. இந்த வாய்ப்பை தர மாட்டாங்க.. ஆனா இது எங்களால முடியும் – கேசவ் மகாராஜ்
“முதல் டெஸ்டில் ஜுரலை தேர்வு செய்து பின் ஏன் நீக்கினீர்கள்? நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் எடுத்த சர்பராஸ் கானுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை? பிரசித் கிருஷ்ணா விளையாட வேண்டிய இடத்தில் எந்த வகையில் ஹர்ஷித் ராணாவை விளையாட வைத்தீர்கள்? என இப்படி அணித்தேர்வில் கம்பீர் நிறைய தவறுகள் செய்திருக்கிறார்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






