சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் டெஸ்ட் போட்டியில் வென்றது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற விதம் குறித்து தென்னாபிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சித் தொடரில் விளையாடி வந்த நிலையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. கடந்த இரண்டு முறையும் இந்திய அணி தகுதி பெற்ற நிலையில் தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் தோல்வியால் இந்திய அணி தகுதி பெற தவறியது.
மேலும் தற்போது இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றியால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜ் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் மிகவும் தகுதியான அணி என்று சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று நாங்கள் சாம்பியன் கோப்பையை ஏந்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்பது குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
யாரும் வாய்ப்பு வழங்க மாட்டார்கள்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “எங்களது டெஸ்ட் யூனிட்டை பார்த்தால் இறுதிப்போட்டிக்கு வருவதற்கான வாய்ப்பை பலர் வழங்கி இருக்க மாட்டார்கள். ஆனால் கிரிக்கெட் கண்ணோட்டத்தின் ஒரு சீரான பார்வையில் நாங்கள் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்ந்தோம். ஆடுகளத்தில் இருக்கும் ஒற்றுமையும் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் தோழமையும் எங்களை சிறப்பாக செயல்பட தூண்டி தற்போதைய நிலை போட்டி வரை முன்னேற்றி இருக்கிறது.
இதையும் படிங்க:நல்ல பெயரை கெடுத்துட்டாரு.. பார்முக்கு வர இத ட்ரை பண்ணாரு.. ஆனா வேலைக்கு ஆகல – ஆஸி முன்னாள் பிளேயர்ஸ்
இது எங்கள் ஆண்டு, எனவே இதுவரை செய்ததை காட்டிலும் மிகவும் சிறப்பாக இறுதிப் போட்டியில் செயல்பட்டு சாம்பியன் கோப்பையை ஏந்துவதற்கு தயாராக இருக்கிறோம். இது விளையாட்டின் மிகக் கடினமான வடிவம். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் சவாலானது ஒரு யூனிட்டாக நாங்கள் சாம்பியன் கோப்பையை கைப்பற்றுவதற்குதகுதியானவர்கள்” என்று கேசவ் மகாராஜ் கூறியிருக்கிறார்.






