நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான அணி இந்திய அணியிடம் 61 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் பயிற்சியாளர் தான் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இந்த போட்டியில் மிக மெதுவான ஆடுகளம் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஆனால் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம் என்று கூறியிருந்தார்.
காசு சும்மா வாங்குறீங்களா?
பொதுவாக மெதுவான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். மேலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்களை தவறான இடங்களில் பயன்படுத்தினார்கள். குறிப்பாக உஸ்மான் தாரிக்கை பத்து ஓவர் களுக்குப் பிறகு எடுத்து வந்தார்கள். இதுவெல்லாம் பெரிய சர்ச்சையாக மாறியது.
இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சல்மான் முதலில் பந்து வீச முடிவு செய்தார். ஆனால் அடுத்து வாழ்வா சாவா நமிபியா போட்டியில் புரிந்து கொண்டு முதலில் பேட்டிங் செய்தார். அவர்கள் கேப்டனை விட்டு விடுங்கள் பயிற்சியாளர் ஹெசன் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். இன்னும் பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். அவருக்கு முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூட தெரியாதா? அவர் அங்கு பணத்தை இலவசமாக பெற்றுக் கொண்டிருக்கிறாரா?”
தவறான திட்டங்கள்
“சல்மான் அலி அதான் கேப்டனாக உலக கோப்பைக்கு புதியவர். எனவே நாம் அவரை விட்டுவிடலாம். ஆனால் உலகம் முழுவதும் வேலை செய்திருக்கும் பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு இந்த ஆடுகளத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா? அப்ரார் அகமதுவை பவர் பிளேவில் கொண்டு வருகிறார். பிறகு அவருக்கு அடி விழுந்ததும் அப்படியே விட்டுவிட்டார்”
இதையும் படிங்க : திலக் வர்மாவை தூக்குங்க.. எதிர் டீம் ஈஸியா பிளான் பண்றாங்க.. அடுத்து மாட்டுவிங்க – இர்பான் பதான் கருத்து
“தவறான முடிவுகளை எடுத்தது பாகிஸ்தான் பயிற்சியாளர்தான். உஸ்மான் தாரிக் குறித்து நிறைய பில்டப் போட்டிக்கு முன்பாக இருந்து வந்தது. ஆனால் பாருங்கள் அவரை பாகிஸ்தான் பயிற்சியாளர் ஏழாவது பந்துவீச்சாளராக கொண்டு வந்தார்” என்று கூறியிருக்கிறார்.






