தற்போது இந்திய டி20 அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் வரும் திலக் வர்மாவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் வந்திருப்பதாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் அதிரடியான கருத்தை முன்வைத்திருக்கிறார்.
தற்போது இந்திய பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இடது கை ஆட்டக்காரர்கள் வருகிறார்கள். இதன் காரணமாக எதிரணியில் இருக்கும் பகுதிநேர ஆப் ஸ்பின்னர்கள் பவர் பிளேவிலேயே வந்து பந்து வீச முடிகிறது. இதனால் எதிரணியின் முக்கிய பவுலர்கள் மிடில் ஓவர்களில் இந்திய அணியை ஆதிக்கம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
என்ன செய்யலாம்?
தற்போது மூன்றாவது வரிசையில் விளையாடிக் கொண்டிருக்கும் திலக் வர்மாவை நான்காவது இடத்திற்கு தள்ளிவிட்டு, வலதுகை ஆட்டக்காரர் கேப்டன் சூரியகுமார் யாதவை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவதின் மூலம் ஒரு சிறிய மாற்றத்தை உண்டாக்கலாம். பகுதி நேர ஆப் ஸ்பின்னர்கள் பவர் பிளேவில் வருவதை தவிர்க்கலாம்.
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” இலங்கையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன் விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ள திலக் விளையாடிக் கொண்டிருந்தார். இன்னொரு முனையில் இஷான் கிஷான் அதிரடியாக ஆடினார். அந்தப் போட்டிக்கு அது பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் அடுத்து அகமதாபாத்தில் அவர் ஏதாவது செய்வார் என்று பார்த்தபோது அவர் மீண்டும் மெதுவாகவே ஆடினார். நான்கு போட்டிகளில் 120 ஸ்ட்ரைக் கேட்டில் அவர் 105 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்”
எதிரணிகள் பிளான்
“தற்போது முதல் மூன்று இடங்களில் இடதுகை ஆட்டக்காரர்கள் வருகின்ற காரணத்தினால் எதிரணிகள் திட்டமிடுவது எளிதாகி விடுகிறது. அவர்களிடம் இருக்கும் பகுதி நேர ஆப் ஸ்பின்னர்கள் பவர் பிளேவில் பந்து வீச வருகிறார்கள். பாகிஸ்தானின் கேப்டன் சல்மான் அலி ஆகா வந்தார். நெதர்லாந்து போட்டியில் ஆரியன் தத் அதேபோல வந்து பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்கள்”
இதையும் படிங்க : நல்லா ஆடற எங்களுக்கு டாஸ் அனாவசியம்.. எங்க பசங்களுக்கு நான் சொன்ன ரெண்டு விஷயம் இதுதான் – சிக்கந்தர் ராஸா பேட்டி
“மேலும் இரண்டாவது சுற்றில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பகுதி நேர ஆப் ஸ்பின்னர் கேப்டன் மார்க்ரம் இதே போல வரலாம். எனவே எதிர் அணிகளின் திட்டத்தை உடைப்பதற்கு இந்திய அணி நிர்வாகம் சூரியகுமார் யாதவை மூன்றாவது இடத்திற்கு அனுப்பலாம். இது நமக்கு முக்கியமான நேரத்தில் கை கொடுக்கும். இல்லையென்றால் பெரிய போட்டிகளில் நாம் இதனால் சிக்கிக் கொள்ளலாம்” எனக் கூறியிருக்கிறார்.






