விராட் பிஆர் வச்சு கிங் ஆகல.. இந்த பட்டத்துக்கு பாபர் அசாம் தகுதியே கிடையாது – ஹபீஸ் விமர்சனம்

0
312
Hafeez

உலக கிரிக்கெட் வீரர்களில் கிங் என்ற பட்டத்திற்கு இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலிக்கு மட்டுமே தகுதி இருக்கிறது என பாகிஸ்தான் முன்னால் கேப்டன் முகமது ஹபீஸ் காட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அந்த நாட்டு ரசிகர்களால் கிங் என்று அழைக்கப்படும் பாபர் அசாம் 26 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதே நேரத்தில் உலகெங்கும் கிங் என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி இறுதி வரை களத்தில் நின்று சதம் அடித்து இந்திய அணியை வெல்ல வைத்தார்.

- Advertisement -

விராட் பெரிய போட்டி வீரர்

இந்த நிலையில் நேற்று படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் அணி நிர்வாகம் என அனைவர் மீதும் கடுமையான விமர்சனங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இதில் தற்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் குதித்து இருக்கிறார்.

விராட் கோலி குறித்து அவர் பேசும் பொழுது “விராட் பெரிய மேடைகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவர் அதற்கான சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் நேரங்களில் சிறப்பாக செயல்பட கூடியவர்கள் நட்சத்திரங்களாக மாற முடியும். சோயப் மாலிக் நிறைய விக்கெட் எடுத்தார் அதேபோல ஷாகித் அப்ரிடி நிறைய சிக்ஸர்கள் அடித்தார். இவர்கள் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதால் நட்சத்திரங்கள் ஆனார்கள்”

- Advertisement -

விராட் கோலி பிஆர் வச்சி கிங் ஆகலை

“விராட் கோலியும் இப்படியான பெரிய சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார். அந்த வாய்ப்புகளை அவர் லாபமாக மாற்ற பார்க்கிறார். மேலும் நேர்மறையான மனநிலையில் இருந்து எனது அணியான இந்திய அணியை வெல்ல வைப்பேன் என்று சொல்லிக் கொள்கிறார். அதேபோல செயல்பட்டு அவர் தனது அணியை வெல்ல வைக்கிறார்”

இதையும் படிங்க : நேற்று ஹர்திக் ரொம்ப கோவமா இருந்தார்.. நாங்க குல்தீப் கிட்ட பேசி புரிய வச்சோம் – அக்சர் படேல் பேச்சு

“உண்மையில் இங்கு யாரையாவது கிங்க் என்று அழைக்க வேண்டுமென்றால் அதற்கு விராட் கோலிதான் தகுதியானவர். பாபர் அசாம் கிடையவே கிடையாது. நீங்கள் விராட் கோலியின் பர்பாமென்சை பாருங்கள். அவர் பிஆர் வைத்து கிங் என்ற பட்டத்தை அடையவில்லை. அவர் உலகெங்கும் சிறப்பாக விளையாடி இந்த பட்டத்தை வென்று இருக்கிறார். விளம்பர தொடர்பாளர்களை வைத்துக் கொள்பவர்கள் இதை கவனிக்க வேண்டும்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -