தற்போது பாகிஸ்தானை தோல்வி அடைந்த காரணத்தினால் அஜெண்டா வைத்து அந்த அணியின் இளம் வீரர்களை மோசமாக விமர்சிக்கிறார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் இளம் வீரர்கள் மிகவும் சாதாரணமான முறையில் விளையாடினார்கள். அவர்களால் இந்திய வீரர்களின் பந்துவீச்சை கணிக்க முடியவில்லை. எனவே வெறும் 127 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனார்கள்.
பாபர் ரிஸ்வான் வெளியேற்றம்
தற்போதைய அணியில் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவருக்கும் இடம் கொடுக்கப்படவில்லை. இளம் வீரர்களைக் கொண்டு சல்மான் அலி ஆகா தலைமையில் பாகிஸ்தான் டி20 அணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியால் சிறந்த பந்துவீச்சு அணிக்கு எதிராக விளையாட முடியவில்லை என இந்தியாவுடன் விளையாடிய போது தெரிந்தது.
மேலும் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முதலீடு செய்யாத காரணத்தினால் உள்ளிருந்து திறமையான வீரர்கள் வருவது நின்று விட்டது. இதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது. குறைந்தபட்சம் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டில் 5 வருடங்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அஜெண்டா வைத்திருக்கிறார்கள்
இது குறித்து முகமது அமீர் பேசும்பொழுது “இங்கு சிலர் அஜெண்டா வைத்து பேசுவதை நான் பார்க்கிறேன். இந்த பசங்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும்? இவர்களால் எப்படி போட்டியிட முடியும்? என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இளம் வீரர்கள் இப்போதுதான் ஆட ஆரம்பித்து இருக்கிறார்கள். இவர்களை இப்போதே பேசி தன்னம்பிக்கையை குறைத்து விடக்கூடாது”
இதையும் படிங்க : இந்தியா எங்களை செஞ்சு விட்டத மறைக்க முடியாது.. மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க – பாக் கோச் வெளிப்படை பேச்சு
“அடுத்து பாபர் ரிஸ்வானும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விளையாடிவிட்டார்கள். அதே சமயத்தில் இந்த ஐந்து ஆண்டில் அவர்கள் அசாதாரணமான எந்த காரியத்தையும் இங்கு நடத்திக் காட்டி விடவில்லை. இதை அவர்களுடைய புள்ளி விபரங்களை நமக்கு சாட்சியாக காட்டும். இப்படி இருக்கும் பொழுது அவர்களை மீண்டும் தேர்வு செய்து என்ன ஆகப் போகிறது? எனவே அஜெண்டாவை விட்டுவிட்டு இளம் வீரர்களை ஆதரிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






