பிசிசிஐ செய்யறது குழந்தைத்தனமானது.. கண்டிப்பா ஐசிசி-ல அந்த தண்டனை இருக்கணும் – முகமது அமிர் பேச்சு

0
378
Amir

2025 சாம்பியன் டிராபி தொடரில் விளையாடுவதற்கு மற்ற நாட்டு அணிகள் பாகிஸ்தான் வரும்பொழுது இந்தியா வரம் இருப்பது சிறுபிள்ளைத்தனமானது என முகமது அமிர் விமர்சனம் செய்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 அணிகளை கொண்டு நடத்தப்படஇருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு மறுத்து வருகிறது. தற்போது உலக கிரிக்கெட்டில் இந்த விவகாரம் மிகவும் பரபரப்பானதாக மாறியிருக்கிறது.

- Advertisement -

இந்திய தரப்பின் வாதம்

இரு நாடுகளும் அரசியல் காரணங்களால் ஒரு தசாப்தத்திற்கு மேல் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல், ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்த வகையில் இந்தியாவில் நடைபெற்ற இரண்டு ஐசிசி உலகக் கோப்பைகளுக்கு பாகிஸ்தான் அணி வந்து விளையாடுகிறது. கடந்த ஆண்டும் வந்து விளையாடியது.

எனவே பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி வரும் என பாகிஸ்தான் நம்பியது. ஆனால் இந்திய தரப்பு பாதுகாப்பை காரணம் காட்டி வர முடியாது என மருத்துவர் வருகிறது. இன்னொரு பக்கத்தில் சர்வதேச அளவில் கிரிக்கெட் மட்டும் என்ற இல்லாமல் பொதுவாக பெரிய நாடுகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்திருக்கின்றன. எனவே இந்த விவகாரம் சிக்கலாக மாறி இருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ மறுப்பது சிறுபிள்ளைத்தனமானது

இது குறித்து முகமது அமிர் கூறும் பொழுது “இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வர மறுப்பது கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பு. நீங்கள் ஒரு அணிக்காக மற்ற அணிகளை கஷ்டப்படுத்த முடியாது. எனவே இந்திய அணியை கழட்டி விட்டு விட்டு ஒரு புதிய அணியை சேர்த்துக்கொண்டு தொடரை நடத்த வேண்டும். மற்ற அணிகள் இங்கு வந்து விளையாட தயாராக இருக்கும் பொழுது இந்திய அணி வர மறுப்பது சிறுபிள்ளைத்தனமானது”

இதையும் படிங்க : பறிபோகும் கம்பீர் பதவி.. பிசிசிஐ வைத்துள்ள செக்.. இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்.. முழு விபரம்

“கிரிக்கெட் விவகாரங்களில் அரசு தலையிடும் பொழுது, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுப்பதற்கு ஐசிசி-யில் விதி இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு அணியுமே ஏதாவது ஒரு நாட்டுக்கு சென்று விளையாட முடியாது என்று கூற ஆரம்பித்து விடுவார்கள். இதை தடுத்து தண்டனை கொடுப்பதற்கு ஒரு விதி கட்டாயம் தேவை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -