இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. இவர்களை விடக்கூடாது – மொயின் அலி பேச்சு

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் தங்கள் நாட்டுக்குள் ஐபிஎல் முதலாளிகளின் தவறான கலாச்சாரம் வந்து விடக்கூடாது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அதிரடியாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது டி20 கிரிக்கெட் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. இதன் காரணமாக உலகெங்கும் சிறிய நாடுகள் கூட தனிப்பட்ட டி20 தொடர்களை நடத்தி வருகின்றன. இந்த வகையில் இங்கிலாந்தில் 100 பங்கு தொடரை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய முதலாளிகள் ஆதிக்கம்

தற்போது ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி இருக்கும் இந்திய முதலாளிகள் வெளிநாட்டு டி20 தொடர்களிலும் அணிகளை வாங்கி குவிக்கிறார்கள். அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா சவுதி அரேபியா, வெஸ்ட் இண்டீஸ் தற்பொழுது இங்கிலாந்து என பல லீக்குகளில் இந்திய முதலாளிகளின் அணிகள் இருக்கின்றன.

இதன் காரணமாக உலக டி20 லீக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு இந்திய முதலாளிகள் உருவாகியுள்ளார்கள். இதன் காரணமாக அவர்கள் தனிப்பட்ட முறையில் வீரர்களை வளைத்து தங்கள் அணிக்கு மொத்தமாக உலகெங்கும் விளையாட வைக்கும் அபாயமும் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் வீரர்கள்

இப்படியான சூழ்நிலையில் இங்கிலாந்தில் நூறு பந்து தொடரில் அணிகளை இந்திய முதலாளிகள் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போதைய ஏலத்தில் இந்திய முதலாளிகள் யாரும் தங்களது அணிக்கு பாகிஸ்தான் வீரர்களை வாங்கவில்லை. இதேபோல உலகெங்கும் தாங்கள் வைத்திருக்கும் அணிகளிலும் பாகிஸ்தான் வீரர்களை வாங்குவதில்லை.

இதையும் படிங்க : இந்திய அணியில இவங்க 2 பேரும் பெரிய ஆள் கிடையாது.. இவரைத்தான் கொண்டு வரணும் – அக்தர் கருத்து

இதுகுறித்து மொயின் அலி பேசும் பொழுது “இந்திய முதலாளிகள் காட்டும் இந்த பாகுபாட்டு கலாச்சாரத்தை நாம் இங்கிலாந்தில் அனுமதிக்கக் கூடாது. வீரர்கள் அனைவரும் இதற்கு எதிராக பேச வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இதில் கவனம் செலுத்தி இப்படி ஒரு தவறு நடக்காமல் இருப்பதை தடுக்கும்” என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Moeen Ali

Recent Posts