தற்போது இந்திய அணியில் ஒரு முக்கியமான வீரரை உள்ளே கொண்டு வந்து விளையாட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.
இந்திய அணி கடைசி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வி பவர் பிளேவிலேயே தெரிந்துவிட்டது. எனவே தற்போது அரையிறுதி வாய்ப்புகள் குறைந்துள்ளன.
முக்கிய பிரச்சனை
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கடைசி கட்ட ஓவர்களில் மிகவும் சிறப்பாக பந்து வீசி போட்டிக்குள் வந்தது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா 20 வது ஓவரை வீச வேண்டிய நிலையில் இருந்தார். அவர் அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் விட்டுத்தர தென் ஆப்பிரிக்கா அணி கை ஓங்கியது.
இது குறித்து சோயப் அக்தர் பேசும்பொழுது “ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே இருவரும் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்கள். இவர்கள் வலிமையான தென் ஆப்பிரிக்கா பேட்டிங் யூனிட்டை அச்சுறுத்தக்கூடிய மால்கம் மார்ஷல் போன்ற வீரர்கள் கிடையாது. நீங்கள் இந்த வேகத்தில் வீசினால் தென் ஆப்பிரிக்காவிடம் அடி வாங்குவதில் இருந்து தப்பிக்க முடியாது”
இந்த வீரர் வேண்டும்
“மேலும் தென் ஆப்பிரிக்க அணி வருண் சக்கரவர்த்தியையும் சிறப்பாக விளையாடியது. அவர் மணிக்கு தொண்ணுத்தி ஆறு கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரை பிரிவிஸ் நோ லுக் சிக்சர் அடித்தார். அவரையும் தென் ஆப்பிரிக்கா விட்டு வைக்கவில்லை”
இதையும் படிங்க : திலக் வர்மாவுக்கு கிரீஸில் இருக்க தகுதியே கிடையாது.. அவர் செஞ்ச இந்த ஒரு தப்பு போதும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“இந்த நிலையில் காற்றில் பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட் எடுக்கக்கூடிய திறமை படைத்த குல்தீப் யாதவை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர்தான் மிகவும் திறமையான ஸ்பின்னர். எனவே அவரை உள்ளே கொண்டு வந்து விளையாட வைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






