இங்கிலாந்து இல்லை..இந்த உ.கோ-ல் இந்தியாவை.. இவர்களால்தான் தோற்கடிக்க முடியும் – மொயின் அலி கணிப்பு

0
3
Moeen

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை எந்த அணியால் வீழ்த்த முடியும் என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயின் அலி மற்றும் தற்போதைய வீரர் ஆதில் ரஷீத் இருவரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது சுற்றில் இந்தியா இடம்பெற்று இருக்கும் பிரிவில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணிக்கு சவால்

இன்று இந்திய அணி இரண்டாவது சுற்றில் தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது.

மேலும் இந்த உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்பாகவே தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய அணிக்கு சவால் கொடுக்கக்கூடியவைகளாக இருக்கும் என பல முன்னாள் வீரர்கள் கூறியிருந்தார்கள். தற்போது இரண்டாவது சுற்றில் இந்தியா நியூசிலாந்து அணிகள் தனித்தனி பிரிவில் இருக்கின்றன.

- Advertisement -

மொயின் அலி கருத்து

இதுகுறித்து மொயின் அலி பேசும் பொழுது ” இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வெல்லக்கூடிய அணியாக தென் ஆப்பிரிக்கா இருக்கும். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் வைத்தாலும், தென் ஆப்பிரிக்க அணி தனது பேட்டிங் பலத்தால் துரத்த முடியும் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்தியாவை பற்றி பாகிஸ்தான் வீரர்கள் இப்படி பேசுறதால.. அந்த டீம் உருப்பட வாய்ப்பே இல்லை – மோகித் சர்மா பேச்சு

மேலும் இதுபற்றி ஆதில் ரஷீத் தனது கணிப்பில் ” நான் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன். அவர்கள் விளையாடும் விதம் மற்றும் அவர்களுடைய பேட்டிங் வரிசையில் நீளம் காரணமாக அவர்களால் இதை செய்ய முடியும். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணியாலும் இதை செய்ய முடியும். மேலும் இந்த பிரிவு மிகவும் கடினமானது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -