அஸ்வினுக்கு நடந்த அவமானம், வேறு எந்த டாப் பிளேயருக்கும் நடந்ததேயில்லை – ரோகித் சர்மாவை சாடிய சுனில் கவாஸ்கர்!

0
1876

“மாடர்ன் டே கிரிக்கெட்டில் அஸ்வின் போன்ற டாப் பிளேயருக்கு நடந்த அவமானம் வேறு எந்த வீரருக்கும் நடந்ததில்லை.” என்று கடுமையாக சாடியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை சென்று கோப்பையை தவறவிட்டது இந்திய அணி. இதனால் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

- Advertisement -

கடந்த முறை நடந்த பைனலில் இதுபோன்ற எந்த சர்ச்சைகளும் வரவில்லை. ஆனால் இம்முறை இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததில் இருந்து, பிளேயிங் லெவனில் அஸ்வின் போன்ற நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் மற்றும் நம்பர் 2 ஆல்ரவுண்டர் வரிசையில் இருப்பவரை எடுக்காதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

ஓவல் மைதானத்தில் மூன்றாவது நாளுக்கு பிறகு சுழல்பந்துவீச்சிருக்கு மைதானம் நன்றாக எடுபட்டதால், அஸ்வின் இருந்திருக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் நேத்தன் லயனுக்கு நன்றாக பந்துவீச்சு எடுபட்டது. இதன் அடிப்படையில் இத்தகைய விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் ரோகித் சர்மா அஸ்வினை பிளேயிங் லெவனில் எடுக்காதது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

- Advertisement -

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அஸ்வின் நடத்தப்பட்டதுபோல நவீன கிரிக்கெட்டில் உலகத்தரமிக்க வீரர் எவரும் இவ்வளவு மோசமாக நடத்தப்பட்டது இல்லை. அவருக்கு இந்திய அணியில் நடந்ததை அவமானமாகவே கருதுகிறேன்.”

“நீங்களே சொல்லுங்கள்.. நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக இருப்பவரை சுழல் பந்துவீச்சிருக்கு சரியாக விளையாட மாட்டார் புற்கள் நிரம்பிய பிட்ச்சில் சரியாக பேட்டிங் செய்ய மாட்டார் என்கிற ஏதாவது ஒரு காரணமாவது சொல்லி வெளியில் அமர்த்துவார்களா? ஆனால் பந்துவீச்சாளருக்கு மட்டும் இப்படி நடப்பது ஏன்? நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருக்கும் அஸ்வினை எப்படி வெளியில் அமர்த்துவீர்கள்? என்று கடுமையாக சாடினார் சுனில் கவாஸ்கர்.