24.75 கோடி மிட்சல் ஸ்டார்க்.. 8 ஓவர் 100 ரன்.. சிஎஸ்கே டேரில் மிட்சலை விட கம்மி விக்கெட்.. வைரல் ஆகும் மேட்டர்

0
200
Starc

இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் போட்டியில், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 16.5 ஓவர்களில் கேகேஆர் அணி ஆர்சிபி அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது. ஒன்பது வருடமாக தங்கள் சொந்த மைதானத்தில் கேகேஆர் அணியை வீழ்த்த முடியாத ஆர்சிபி அணியின் சோகம் தொடர்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு 59 பந்துகளில் விராட் கோலி 83 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சில் கேகேஆர் அணிக்கு இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா 4 ஓவர்களுக்கு 39 ரன்கள் தந்து 2 விக்கெட்டும், ரசல் 4 ஓவர்களுக்கு 29 ஓவர்களுக்கு 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இந்த போட்டியில் கேகேஆர் அணிக்கு 24.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 4 ஓவருக்கு 47 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. மேலும் விராட் கோலி எல்லா பந்துவீச்சாளர்களுக்கும் ஆடுகளத்தில் வேகமாறுபாடு இருந்ததால் தடுமாறி விளையாடினார். ஆனால் மிச்சம் ஸ்டார்க் பந்துவீச்சை மட்டும் சிரமமே இல்லாமல் அடித்து ரன்கள் எடுத்தார்.

இதேபோல் கேகேஆர் அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 19ஆவது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் 26 ரன்கள் விட்டுத் தந்தார். இதற்குப் பின் 20வது ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, ஹர்ஷித் ராணா மிகச் சிறப்பாக பந்து வீசி, கேகேஆர் அணியை வெல்ல வைத்தார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசிய மிட்சல் ஸ்டார்க் 53 ரன்கள் தந்து டிக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

- Advertisement -

இதுவரை அவர் மொத்தம் எட்டு ஓவர்கள் இரண்டு போட்டிகளில் பந்து வீசி மொத்தமாக 100 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார். ஓவருக்கு 12 ரன்கள் மேல் சென்று இருக்கிறது.அதே சமயத்தில் அவர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. ஆட்டத்தின் எந்தப் பகுதியில் அவர் பந்து வீசினாலும் ரன்கள் கசிந்து கொண்டே இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவில் சொந்த மைதானத்திலேயே இவர் கழட்டி விடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலியாலயே முடியல.. ரசலை பார்த்து திட்டம் போட்டோம்.. இதனாலதான் தோத்தோம் – பாப் டு பிளிசிஸ் பேட்டி

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு பேட்ஸ்மேனாக 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட டேரில் மிட்சல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் கொடுத்து விஜய் சங்கர் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதை வைத்து சமூக வலைதளத்தில் மிட்சல் ஸ்டார்க்கை ஐபிஎல் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த கம்பேரிசன் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

- Advertisement -