ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சமீபத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த ஓய்வு முடிவை அறிவித்ததில் தான் ஒரு விஷயத்தில் தவறு செய்து விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
மிகப்பெரிய தொடர்களில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவரான மிட்சல் ஸ்டார்க், அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடக்க இருக்கும் நிலையில் திடீரென சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஆச்சரியத்தை கொடுக்கிறது.
உலக கிரிக்கெட்டில் உரிமையாளர்கள் நடத்தும் டி20 லீக்குகள் ஐபிஎல் தொடரின் காரணமாக மிகவும் பிரபலமடைந்த போதும், அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு பெரிய அளவில் பணம் கிடைத்த போதும், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு பங்களிப்பை சிறந்த முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக மிட்சல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் கூட விளையாடவில்லை.
இதே போல ஒவ்வொரு முக்கியமான தொடர்களில் போதும் 100 சதவீதத்தை கொடுப்பதற்காக சரியான ஓய்வு எடுத்து, பிறகு போட்டிகளில் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை வெல்ல வைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு பந்துவீச்சில் முக்கிய போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் முதன்மை பந்துவீச்சாளராக இருக்கிறார்.
இதுகுறித்து மிட்சல் ஸ்டார்க் பேசும் பொழுது ” நான் என்னுடைய சர்வதேச டி20 கிரிக்கெட் ஓய்வு குறித்து அணி நிர்வாகம் மற்றும் தலைமை பயிற்சியாளரிடம் மட்டுமே பேசினேன். என்னுடைய ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பார்த்து தெரிந்து கொண்டதாக டி20 கேப்டன் மிட்சல் மார்ஸ் என்னிடம் கூறினார். இது எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. நான் என்னுடைய ஓய்வு குறித்து கேப்டனிடம் பேசி இருக்க வேண்டும். இது குறித்து மோசமாக உணர்ந்தேன்”
இதையும் படிங்க : ஒரு கேப்டனா சொல்றன்.. இந்திய டீம்ல இவர்தான் அண்டர்ரேட்டடு பிளேயர்.. எத வேணாலும் செய்வாரு – ரகானே பேச்சு
“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்ல பங்களிப்பை கொடுப்பதற்கு என் உடலை சரியாக வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மேலும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா அணியில் நான் தேர்வாக வேண்டும். இதற்கு என்னை தயார் நிலையில் வைத்துக் கொள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.