தற்போதைய இந்திய அணியில் கோப்பையை வென்று தரக்கூடிய அளவுக்கு சிறப்பாக செயல்படக்கூடிய இரண்டு வீரர்கள் பற்றி இந்திய வீரர் ரகானே பேசி இருக்கிறார்.
இந்திய அணி நீண்ட ஓய்வுக்கு பிறகு செப்டம்பர் 9ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேடில் துவங்கும் 8 ஆசிய அணிகள் பங்குபெறும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் குறித்து ரகானே பேசி இருக்கிறார்.
இவர் அண்டர் ரேட்டட் பிளேயர்
இதுகுறித்து ரகானே பேசும்பொழுது “அக்சர் படேல் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு வீரராக இருக்கிறார். அவர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஒரு வீரராக மிகவும் முன்னேற்றம் அடைந்திருக்கிறார். பவுலராக பேட்ஸ்மேனாக வாய்ப்பு கிடைக்கும் எல்லா நேரத்திலும் அணிக்காக சிறப்பானது வெளிப்படுத்தி இருக்கிறார். அவரால் பவர் பிளேவில் மட்டும் இல்லாமல் நடுவிலும் கடைசியிலும் பந்து வீச முடியும்”
“ஒரு கேப்டனாக அக்சர் படேல் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். அதேபோல் அவரது பீல்டிங் திறமையையும் மறந்து விடக்கூடாது. தற்போது யுஏஇல் ஆசியக் கோப்பை தொடர் நடைபெறுவதால் சுழற் பந்து வீச்சுக்கு நல்ல சாதகம் இருக்கும். இதை அவரால் பயன்படுத்திக் கொள்ள முடியும்”
ஹர்திக் இதை செய்யணும்
“இந்த ஆசிய கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் தேவை அதிகமாக இருக்கும். கடந்த காலங்களில் ஆல் ரவுண்டராக நிறைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் வந்து அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சூழ்நிலைக்கு தகுந்தபடியும் விளையாடி இருக்கிறார். அவரால் இதையெல்லாம் மீண்டும் செய்ய முடியும்”
இதையும் படிங்க : கில் அபிஷேக் நான் செஞ்ச அந்த தப்ப செய்யாதீங்க.. இந்த வேற விளையாட்டையும் ஆடுனா மாஸ் பண்ணலாம் – யுவராஜ் சிங் அறிவுரை
“ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் முழுமையாக நான்கு ஓவர்கள் பேச வேண்டும். இதை அவரால் தொடர்ந்து செய்ய முடிந்தால் இந்திய அணி மிகவும் சமநிலை கொண்ட அணியாக பலமான அணியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






