இந்திய கிரிக்கெட்

டாட் பந்து போட வழியே இல்லை.. இந்தியா கிட்ட முதல் பந்தில் இருந்து எச்சரிக்கையா இருக்கணும் – மிட்சல் சான்ட்னர் பேச்சு

இந்திய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது முதல் பந்தில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தங்களால் டாட் வந்து இந்திய அணிக்கு எதிராக வைக்க முடியவில்லை எனவும் நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 48 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 238 ரன் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் எல்லா பேட்ஸ்மேன்களும் அதிரடியாகவே விளையாடினார்கள். யாருமே வேட்டைக்கு கீழே வைக்கவில்லை.

முதலில் இருந்தே உஷார் ஆகணும்

இதுகுறித்து மிச்சல் சான்ட்னர் பேசும் பொழுது ” இந்திய அணியின் செயல்பாடு கடந்த இரண்டு வருடங்களாக மிக அபாரமாக இருந்து வருகிறது. எனவே இந்த போட்டி எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாகவும் பயிற்சி ஆகவும் அமைந்தது. எங்கள் பக்கத்தில் பிலிப்ஸ் மற்றும் சாப்மேன் இருவரும் விளையாடிய விதம் நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. நீங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை காட்டினால் பிறகு அடித்து விளையாட முடியும் என்று தெரிகிறது”

“நாங்கள் பந்து வீசும் பொழுது ஆரம்பத்தில் இருந்தே அழுத்தத்தில் இருந்தோம். இந்திய அணிக்கு எதிராக சில டாட் பந்துகளை வீசலாம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. முதல் பந்தில் இருந்தே தீவிரமாகவும் கவனத்தோடும் விளையாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்போதுதான் இந்த அணிக்கு எதிராக நீங்கள் வெற்றி பெற முடியும்”

- Advertisement -

எங்கள் பிளான் இதுதான்

“கடைசி ஓவரை டேரில் மிட்சல் வீச வேண்டிய அவசியம் உருவானது அந்த நேரத்தில்தான். இந்தியா ஆரம்பத்திலிருந்து ஸ்பின்னர்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவே நான் அந்த நேரத்தில் பந்து வீச வரவில்லை. கடைசி ஓவரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் யார் வீசினாலும் அது கடினமானதுதான்”

இதையும் படிங்க: நான் என் விஷயத்தில் இதை மாற்றப் போவது கிடையாது.. அபிஷேக் பத்தி சந்தோஷமா இருக்கு – சூரியகுமார் யாதவ் பேட்டி

“நான் பேட்டிங் வரிசையில் இன்னும் கொஞ்சம் ஒளிந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது ஏழாவது இடத்தில் நான் பேட்டிங் செய்ய விரும்பவில்லை. எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வரவே நினைக்கிறேன். எங்களிடம் ஏழாவது இடத்தில் விளையாடுவதற்கு வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by